News November 2, 2025

தாலிக்கொடியில் Safety pin-ஐ மாட்டி வெக்குறீங்களா?

image

எங்காவது வைத்துவிட்டால், அவசரத்துக்கு தேட முடியாது என்ற காரணத்தால், பல பெண்களும் தாலியில் Safety Pin-ஐ மாட்டி வைப்பார்கள். ஆனால், இரும்பினால் செய்யப்படும் Safety pin-ஐ தாலியுடன் கோர்த்து வைத்திருப்பது நல்லதல்ல என ஜோதிடர்கள் கூறுகின்றனர். ஜோதிடத்தின் படி, இரும்பு சனி பகவானின் பார்வை பெற்ற உலோகமாகும். இது எதிர்மறை ஆற்றலை கொடுக்கும் என்பதால், தாலியுடன் போட வேண்டாம் என அறிவுறுத்துகின்றனர். SHARE IT.

Similar News

News November 3, 2025

ஜிம்முக்கு போகணுமா? இதெல்லாம் தேவைப்படும்

image

உடற்பயிற்சி செய்பவர்களுக்கு நீரேற்றம், சுகாதாரம், உற்சாகம் போன்றவை தேவைப்படும். நீங்கள் ஜிம்முக்கு போக போறீங்களா? உங்களுக்கு சில அத்தியாவசிய பொருட்கள் அவசியம். அவை என்னென்ன பொருட்கள் தேவை என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று உங்களுக்கு தெரிந்த டிப்ஸை, கமெண்ட்ல சொல்லுங்க.

News November 3, 2025

நவம்பர் 3: வரலாற்றில் இன்று

image

*1838 – பாம்பே டைம்ஸ் முதன் முதலில் வெளியிடப்பட்டது. *1933 – நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் பிறந்தநாள். *1957 – லைக்கா என்னும் நாயை சோவியத் ஒன்றியம் ஸ்புட்னிக் 2 விண்கலத்தில் விண்வெளிக்கு அனுப்பியது. *1963 – ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டில் காமராசர் அதன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். *2014 – உலக வர்த்தக மையம் ஒன்று திறக்கப்பட்டது.

News November 3, 2025

லெஜெண்ட்ஸ் பட்டியலில் ஹர்மன்பிரீத் கவுர்

image

அதிக வயதில் மகளிர் உலகக் கோப்பையை வென்ற கேப்டன் என்ற பெருமையை ஹர்மன்பிரீத் கவுர் பெற்றுள்ளார். அவருக்கு வயது 36 வருடம் 239 நாட்களாகும். இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பையை பெற்றுத் தந்த இந்திய லெஜெண்ட்களின் பட்டியலிலும் அவர் இணைந்துள்ளார். கபில் தேவ் (1983 ODI), தோனி (2007 டி20, 2011 ODI), ரோஹித் (2024 டி20) ஆகியோர் தலைமையில் இந்தியா உலகக் கோப்பைகளை வென்று இருக்கிறது.

error: Content is protected !!