News August 12, 2024

தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். தொடர்ந்து மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 8 கிராம் தங்க நாணயத்தினை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ், இன்று வழங்கினார்.

Similar News

News March 8, 2026

நாகை: ரயிலில் மதுபாட்டில்கள் கடத்தல்.. போலீசார் அதிரடி

image

நாகை ரயில் நிலையத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, ரயில்களில் சோதனை செய்தப்போது காரைக்கால்- வேளாங்கண்ணி இடையே சென்ற பயணிகள் ரயிலில் சந்தேகத்துக்கு இடமாக கிடந்த 8 பைகள் கிடந்துள்ளது. இதனை சோதனை செய்ததில், புதுச்சேரி மாநில சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

News March 7, 2026

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் (மார்ச்.07) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.08) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 7, 2026

நாகை மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

image

நாகை மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <>லிங்கை க்ளிக் <<>>செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!