News August 20, 2025

தாராபுரம்: இலவச தகவல் அறியும் உரிமை சட்ட பயிற்சி

image

திருப்பூர்: தாராபுரம் சட்டமன்ற தொகுதி, மூலனூர் ஒன்றியம், மூலனூர் அறப் போர் இயக்கத்தின் சார்பில் வருகிற ஆக.23ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மூலனூர் சார் பதிவாளர் அலுவலகம் அருகில் உள்ள திலகம் திருமண மண்டபத்தில், இலவச தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பை அனைவரும் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 4, 2026

BREAKING: சிவன்மலையில் வெட்டிக்கொலை

image

காங்கேயம் அடுத்த சிவன்மலையில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இங்கு அண்ணாச்சி பழ கடை வைத்திருந்த கோபியைச் சேர்ந்த ராஜேஷ் (40) என்பவர் கோயில் அடிவார பகுதியில் நேற்று இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை செய்து வருகின்றனர்.

News February 4, 2026

திருப்பூர்: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

திருப்பூர் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>voters.eci.gov.in/login<<>> என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். யாருக்காவது பயன்படும் இதை அதிகம் SHARE பண்ணுங்க!

News February 4, 2026

திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

error: Content is protected !!