News January 11, 2026
தாராபுரம் அருகே விபத்து

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே இன்று காலை அரசு பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் குமார் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள், ஆட்டோ ஓட்டுனரை மீட்டு தாராபுரம் GH-ல் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இவ்விபத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Similar News
News February 2, 2026
தாராபுரம் அருகே வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது

தாராபுரம் அருகே அலங்கியம் ஊராட்சி சின்னக்கம்பாளையம் பகுதியில், வள்ளலார் பிறந்தநாளையொட்டி மதுக்கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், சட்டவிரோதமாகச் சாராயம் காய்ச்சிய சுந்தரம் என்பவர் கைது செய்யப்பட்டார். பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில், அலங்கியம் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி இவரைக் கைது செய்தனர். அவரிடம் தற்போது தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
News February 1, 2026
திருப்பூர்: வாக்காளர்கள் கவனத்திற்கு!

திருப்பூர் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இந்த முக்கிய தகவலை SAVE செய்து, SHARE பண்ணுங்க!
News February 1, 2026
திருப்பூர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2) விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
5) இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.


