News January 6, 2026

தாராபுரம் அருகே வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது

image

தாராபுரம் அருகே அலங்கியம் பகுதியை சேர்ந்த கவுண்டத்தாள், இவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் ரூ.99,500-ஐ திருடி சென்றார். இது குறித்து அலங்கியம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சுகுமார் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து ரூ.99,500-ஐ பறிமுதல் செய்தனர்.

Similar News

News January 31, 2026

திருப்பூர்: தமிழ் தெரிந்தால் போதும் – வங்கி வேலை!

image

SBI வங்கியில் காலியாக உள்ள வட்டார அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 2,050 (தமிழகத்தில் மட்டும்: 165)
3. வயது: 21-30 (SC/ST-35, OBC-33)
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7.விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>
வேலை தேடும் யாருக்காவது நிச்சயம் இது உதவும் இந்த தகவலை அதிகம் SHARE பண்ணுங்க!

News January 31, 2026

திருப்பூரில் மாணவர் பலி: டிரைவருக்கு 7 ஆண்டு சிறை

image

திருப்பூரில் கடந்த 2022-ல் கறிக்கோழி லாரி மோதி பொள்ளாச்சி கல்லூரி மாணவர் ஆரியன் உயிரிழந்த வழக்கில், திருப்பூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக, லாரி டிரைவர் ராஜ்குமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி பத்மா உத்தரவிட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் விவேகானந்தம் ஆஜரானார்.

News January 31, 2026

அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்!

image

வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு நாளை முன்னிட்டு, பிப்ரவரி 1-ம் தேதி திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள், மதுபானக்கூடங்கள் மற்றும் தனியார் மதுபான விடுதிகளை நாள் முழுவதும் அடைக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் மனிஷ் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை மீறி மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!