News January 14, 2026
தாரமங்கலம்: வயிற்று வலியால் பெண் விபரீத முடிவு!

தாரமங்கலம் குருக்குப்பட்டியைச் சேர்ந்த சரஸ்வதி (55), அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த ஒரு ஆண்டாகக் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர், நேற்று மதியம் மனவேதனையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அவரது கணவர் மாரியப்பன் அளித்த புகாரின் பேரில், தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 20, 2026
சேலம்: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

சேலம் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News January 20, 2026
சேலத்தில் வேலை வேணுமா? CLICK NOW

சேலம் மாவட்ட இளைஞர்களே வேலை வாய்ப்பு கிடைக்காமல் ஏங்கி தவிக்கிறீர்களா? உங்களுக்காக அருமையான ஒரு யோசனை. அரசு வேலைவாய்ப்புத்துறை சார்பில் சேலம் மாவட்டத்தில் இயங்கும் பல்வேறு தனியார் நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News January 20, 2026
மேச்சேரி: திருவிழாவில் முதியவர் அடித்துக் கொலை

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே வேரகொண்டபட்டியில் கோவில் திருவிழா நடைபெற்றது, திருவிழாவில் சண்முகம் (எ) மயில் (65) என்பவருக்கும் முத்துசாமி (27) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் முத்துசாமி தாக்கியதில் பின் மண்டையில் பலத்த காயமடைந்த சண்முகம், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துசாமியைக் கைது செய்தனர்.


