News January 5, 2026

தாரமங்கலம்: மகனின் பிறந்த நாளில் ஏற்பட்ட சோகம்!

image

தொட்டம்பட்டியை சேர்ந்த தமிழ்மணியும், அவரது தம்பி பொன்னுமணியும் பெங்களூரில் இருந்து தங்களது இருசக்கர வாகனத்தில் ஓமலூர் வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஓமலூர் அருகே அவர்களது டூவீலர் மீது ஜீப் மோதியதில் தமிழ்மணி உயிரிழந்தார். தமிழ்மணி தனது மகனின் பிறந்த நாளை கொண்டாட இருவரும் வந்த போது விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தாரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News January 20, 2026

சேலத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை!

image

சேலத்தில் பல்வேறு பகுதிகளில் மின் பராமரிப்பு பணி காரணமாக கீழ் கண்ட பகுதிகளில் நாளை(ஜன.21) காலை 9 மணி முதல் காலை 5 வரை மின் தடை: தெடாவூர், கெங்கவல்லி, ஆணையம்பட்டி,புனல்வாசல், கிழக்குராஜபாளையம், வீரகனூர்,நடுவலூர், ஓதியத்தூர், பின்னனூர்,லத்துவாடிஎட்டிக்குட்டைமேடு, கோணங்கிபூர்,ஏகாபுரம், பூலாம்பட்டி, எடப்பாடி,இளம்பிள்ளை, சித்தர்கோவில் இடங்கணசாலை,வேம்படித்தாளம்,காக்காபாளையம், மகுடஞ்சாவடி, சீரகாபாடி

News January 20, 2026

சேலம்: ஆட்டையாம்பட்டி வசமாக சிக்கிய குடும்பம்!

image

சேலம் ஆட்டையாம்பட்டியில் கடந்த 2000-ம் ஆண்டு நடைபெற்ற அடிதடி வழக்கில் கோவிந்தராஜ், அவரது மனைவி சித்ரா மற்றும் மகன்கள் கணபதி, கோகுல்நாத் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். 24 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த இவர்கள், ஊருக்குள் வந்திருப்பதை அறிந்த ஆட்டையாம்பட்டி போலீசார், விரைந்து செயல்பட்டு நால்வரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

News January 20, 2026

சேலம்: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

image

சேலம் மக்களே உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை <>இங்கே கிளிக்<<>> செய்து பதிவிறக்கம் செய்யுங்கள்.அந்த படிவத்தை பூர்த்தி செய்து, உங்கள் வங்கி மேலாளரிடம் கொடுத்தால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!