News November 8, 2024
தாரமங்கலம்: பள்ளியில் கிரிக்கெட் வீரர் நடராஜன்

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் நடராஜன், இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளார். இவர் தனது மகள் பிறந்தநாளை தாரமங்கலம் எக்காம்வெல் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் நேற்று கொண்டாடினார். பள்ளி நிர்வாகிகள் லாரன்ஸ், ஜூலி ஆகியோர், நடராஜன் குடும்பத்தினரை வரவேற்று, குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்தனர். மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற நடராஜனுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Similar News
News August 28, 2025
ஆக.29 எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மதியம் 12 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்துக்கு வருவாய் அலுவலர் ரவிக்குமார் தலைமை தாங்குகிறார். இதில் எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு எரிவாயு உருளைகள் பதிவு செய்வதிலும், வினியோகம் செய்வதிலும் உள்ள குறைகளை மனுக்களாக அளித்து தீர்வு காணலாம்.
News August 28, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஆகஸ்ட்.27) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
News August 27, 2025
சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகரில் இன்று (ஆகஸ்ட் 24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை, மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.