News May 31, 2024
தாய் கண்டித்ததால் மாணவி தற்கொலை

பாப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனி மகள் சந்தியா +2 முடித்து விட்டு தனியார் கல்லூரியில் சேர விண்ணப்பித்தார். இந்நிலையில் வீட்டில் வேலை செய்யாமல் செல்போன் பார்த்து கொண்டிருந்ததால் அவரது தாயார் கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சந்தியா விஷம் குடித்து மயங்கினார். தொடர்ந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாப்பாரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 4, 2025
வாக்காளர் பட்டியல் திருத்தம் உதவி மையங்கள் அமைப்பு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக வாக்காளர்களுக்கு தேர்தல் அலுவலர் மற்றம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. உதவி மையங்களை கீழ்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.
1.மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் – 1950
2.வாக்காளர் பதிவு அலுவலர், தருமபுரி – 04342-260927
3.வாக்காளர் பதிவு அலுவலர், பாலக்கோடு – 04348-222045 தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 4, 2025
தருமபுரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

தருமபுரி மாவட்டம் முழுவதும் இன்று (நவ.04) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ராஜாசுந்தர் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக் கொள்ள, தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்
News November 4, 2025
நான்காண்டுகளில் தூய்மை இந்தியா இயக்கம்

தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்காண்டுகளில் தூய்மை இந்தியா இயக்கம் (SBM 2.0) திட்டத்தின் கீழ், ரூ.4.59 கோடி மதிப்பீட்டில் சமுதாயக் கழிப்பறைகள் கட்டும் பணி, நகராட்சி உரக்கிடங்கில் Bio-Mining முறையில் குப்பைகள் அகற்றும் பணி, பொருட்கள் மீட்பு கூடம் (MRF) அமைக்கும் பணி, STP-யில் (Decanting Facility) கட்டும் பணி நடைபெற்றுள்ளது.
தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.


