News December 8, 2025

தாய்லாந்து-கம்போடியா மோதல்: மீண்டும் போர் பதற்றம்!

image

கடந்த அக்டோபர் மாதம் தான், டிரம்ப் முன்னிலையில் <<17232581>>தாய்லாந்து-கம்போடியா<<>> போர் சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், 2 மாதங்கள் கூட நிறைவடையாத சூழலில், இன்று எல்லையில் மீண்டும் மோதல் வெடித்துள்ளது. தங்கள் ராணுவ வீரர் கொல்லப்பட்டதாக கூறி, கம்போடியாவின் ராணுவ இலக்குகள் மீது தாய்லாந்து வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. இதை கம்போடியா மறுத்துள்ள நிலையில், மீண்டும் போர் பதற்றம் உருவாகி உள்ளது.

Similar News

News March 9, 2026

விஜய் மனைவி சங்கீதாவுக்கு என்னாச்சு.. பரபரப்பு தகவல்

image

சென்னையில் சங்கீதா தங்கியுள்ள பங்களாவைச் சுற்றி விஜய்யின் ஆள்கள் நடமாடியதாகவும், சங்கீதாவின் செல்போனுக்கு சிக்னல் கிடைக்காமல் இருக்க ஜாமர் வைக்கப்பட்டதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. HOUSE ARREST-ல் இருந்து மீளவே விஜய்யின் நீலாங்கரை வீட்டில் தங்க அனுமதிக்குமாறு அவர் புதிய மனு அளித்துள்ளாராம். மேலும், சங்கீதாவுக்கு திமுகவுக்கு நெருக்கமான நடிகர் ஒருவர் உதவுவதாகவும் சொல்லப்படுகிறது.

News March 9, 2026

அதிமுகவிடம் 6 தொகுதிகளை கேட்கும் புரட்சி பாரதம் கட்சி

image

அதிமுக வரும் 12-ம் தேதி தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக்காக அழைப்பு விடுத்துள்ளதாக புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னத்தில் போட்டியா, அல்லது தனிச் சின்னத்தில் போட்டியா என்பது அதன்பின் தான் தெரிய வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 6 தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டுள்ளதாகவும், 4 தொகுதிகள் தருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

News March 9, 2026

சினிமா பாடலால் பொய்த்து போன காதல்.. அதிர்ச்சி!

image

காதல் கரம் பிடித்த கணவரின் சிறு பிடிவாதம், சேலம் ஆத்தூரை சேர்ந்த புவனேஸ்வரி(25) என்பவரை விபரீத முடிவெடுக்க வைத்துள்ளது. டிவியில் தனக்கு பிடித்த பாடலை வைக்க சொல்லி புவனேஸ்வரி, கணவரிடம் கேட்டுள்ளார். ஆனால், கணவர் மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்து போன புவனேஸ்வரி, தனது 6 வயது மகனை தனியாக விட்டுட்டு, அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அத்தனை வருட காதல், ஒரு பாடலால் பொய்த்து விட்டதா?

error: Content is protected !!