News December 14, 2025
தாய்லாந்து கடற்கரை பகுதிகளில் ஊரடங்கு!

கம்போடியாவின் <<18550033>>கோ கோங்<<>> மாகாணத்தின் மீது தாய்லாந்து தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, இருநாடுகள் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. இதன் எதிரொலியாக தாய்லாந்தின் தென்கிழக்கு மாகாணமான டிராட்டில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சுற்றுலா தீவுகள் தவிர்த்து, 5 மாவட்டங்களில் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. முன்னதாக கிழக்கு சாகியோ மாகாணத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளது.
Similar News
News December 15, 2025
SPORTS 360°: ஓடிசா மாஸ்டர்ஸில் உன்னதி, கிரண் சாம்பியன்

*மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் சென்னை மாணவி தங்கம் வென்றார். *ஒடிசா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டனில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் உன்னதி ஹூடாவும், ஆண்கள் பிரிவில் கிரண்ஜார்ஜும் சாம்பியன் பட்டம் வென்றனர்.
*38 அணிகள் பங்கேற்கும் சந்தோஷ் கோப்பைக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் இன்று தொடங்குகிறது.
News December 15, 2025
வரலாற்றில் இன்று

*1891 – ஜேம்ஸ் நெய்ஸ்மித் கூடைப்பந்தாட்டத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார்.
*1950 – இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் மறைந்தநாள்.
*1995 – ஈழத்தமிழருக்கு ஆதரவாக அப்துல் ரவூஃப் தீக்குளித்து இறந்தார்.
*1997 – தென் கிழக்கு ஆசியா அணுவாயுதமற்ற பகுதியாக அறிவிக்கப்பட்டது.
*2013 – தெற்கு சூடானில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
News December 15, 2025
அமித்ஷாவுடன் பேசியது என்ன? நயினார் நாகேந்திரன்

டெல்லி சென்ற நயினார் நாகேந்திரன் நேற்று இரவு அமித்ஷாவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்றும், தனது யாத்திரை பற்றி அமித்ஷா கேட்டறிந்ததாகவும் கூறினார். மேலும் புதுக்கோட்டையில் முடிவடையும் யாத்திரையில் அமித்ஷா (அ) மோடி பங்கேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.


