News December 11, 2025

தாயுள்ளதால் கவர்ந்திழுத்த பெண் காவலர்❤️❤️

image

வார்த்தைகளால் விரிக்க முடியாத பெண்களின் தாயுள்ளத்தை ஒரு நொடியில் உணர்த்துகிறது மேலே உள்ள ஒற்றை போட்டோ. தெலங்கானா பஞ்சாயத்து தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற, ஒரு பெண் கைக்குழந்தையுடன் சென்றுள்ளார். அவர் சிரமமின்றி வாக்களிக்க, பெண் காவலர் ஒருவர் தாயுள்ளத்தோடு குழந்தை வாங்கிக்கொண்டு தோளில் போட்டு தாலாட்டினார். பணிச்சுமைக்கு மத்தியில் தாயுள்ளதால் பலரின் கவனத்தை ஈர்த்த காவலரை நாமும் வாழ்த்தலாம்.

Similar News

News December 13, 2025

கோலியை முந்தினாலும் அலட்டிக் கொள்ளாத வைபவ்!

image

U19 ஆசியக்கோப்பையில் நேற்றைய UAE உடனான போட்டியில், இந்திய வீரர் சூர்யவன்ஷி 171 ரன்கள் விளாசி ருத்ரதாண்டவம் ஆடினார். இதையடுத்து, கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களில் பட்டியலில் அவரது பெயர் தடாலடியாக உயர்ந்து, கோலியையும் முந்தியது. இது தொடர்பாக பேசிய சூர்யவன்ஷி, இது போன்ற செய்திகள் சிரிப்பை வரவழைக்கிறது; இருப்பினும் இது எனது கிரிக்கெட்டை பாதிக்காது, கடந்து சென்றுவிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

News December 13, 2025

டிசம்பர் 13: வரலாற்றில் இன்று

image

*1952 – நடிகை லட்சுமி பிறந்தநாள். 1963 – டிடிவி தினகரன் பிறந்தநாள். *1972 – அப்பல்லோ 17 விண்வெளி வீரர்கள் யூஜீன் செர்னன், அரிசன் சிமித் ஆகியோர் சந்திரனில் இறங்கினர். சந்திரனில் இறங்கிய கடைசி மனிதர்கள் இவர்களே. 1990 – நடிகை ரெஜினா கஸான்ட்ரா பிறந்தநாள். *2001 – இந்திய நாடாளுமன்றக் கட்டடம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

News December 13, 2025

இன்சூரன்ஸில் 100% அந்நிய முதலீடு: மக்களுக்கான பயன்?

image

இன்சூரன்ஸ் துறையில், அந்நிய நேரடி முதலீட்டை 74% to 100%ஆக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக திங்களன்று நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பால், சர்வதேச நிறுவனங்கள் முழுமையாக இந்தியாவில் கால்பதிக்கும். இதனால், மக்களுக்கு சர்வதேச தரத்திலான சேவை கிடைப்பதோடு, காப்பீட்டுக்கான பிரீமியம் விலையும் குறைய வாய்ப்புகள் உள்ளது.

error: Content is protected !!