News May 8, 2024
தாயின் உடலை வீட்டிற்குள் புதைத்த மகன்

தூத்துக்குடி அருகே உள்ள ஐய்யனடைப்பை சேர்ந்தவர் ஆஷா பைரஸ். இவர் தனது மகன் குலாம் காதருடன் வசித்து வந்தார். இந்நிலையில் குலாம் காதர் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே சிப்காட் போலீசார் விசாரணை நடத்திய போது கடந்த 2 ஆம் தேதி இறந்த தனது தாயின் உடலை உறவினர்கள் இல்லாததால் வீட்டருகே புதைத்து விட்டதாக குலாம் காதர் தெரிவித்தார். இதையடுத்து ஆஷா பைரஸ் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 13, 2026
தூத்துக்குடி: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News February 13, 2026
தூத்துக்குடி: GPay / PhonePe / Paytm Use பண்றீங்களா? கவனம்!

தூத்துக்குடி மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க
News February 13, 2026
JUST IN: தூத்துக்குடி எஸ்.பி திடீர் டிரான்ஸ்பர்!

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாக பணிபுரிந்து வரும் சிலம்பரசன் மாவட்டத்தில் பொறுப்பேற்று ஒரு சில மாதங்களே ஆனது. இந்த நிலையில் அவர் திடீரென தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு சென்னை சட்டம் ஒழுங்கு எஸ்.பி-யாக பணியமர்த்தப்பட்டுள்ளார். மேலும், திருநெல்வேலி மேற்கு கமிஷனராக பணிபுரிந்து வரும் மதன் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாக பொறுப்பேற்க உள்ளார். இந்த திடீர் மாற்றம் பரபரப்பை கிளப்பி உள்ளது.


