News January 9, 2025
தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் பணியிடை மாற்றம்

தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலராக சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து அலுவலர் யுவராஜ் என்பவர் கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில் ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையராக உதவி செயலராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆர்டிஓ உதவியாளராக இருந்த குமரகுரு கூடுதல் பொறுப்பாக ஆர்டிஓ பணிகளை கவனிப்பார் என உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News October 1, 2025
செங்கல்பட்டில் இன்று இரவு ரோடு செல்லும் காவலர் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (செப்-30) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 30, 2025
செங்கல்பட்டு: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில், www.tnesevai.tn.gov.in, என்ற தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News September 30, 2025
செங்கல்பட்டு: B.E.,MBA போதும்.. ரூ.30,000 சம்பளம்

ஆவடியை தலைமை இடமாககொண்டு ராணுவ வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனம் செயல்படுகிறது. அங்கு காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு B.E., MBA முடித்தவர்கள் இங்கு <