News August 16, 2024
தாம்பரம் மார்க்கத்தில் வழக்கம் போல் ரயில்கள் இயக்கம்

தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக விரைவு ரயில் மற்றும் மின்சார ரயில்கள் ஆக.14-ஆம் தேதி வரை பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டது, பணிகள் முடிவடையாததால் ஆக.18-ஆம் தேதி வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனிடையே வரும் ஆக.19-ஆம் தேதி முதல் தாம்பரம் மார்க்கத்தில் அனைத்து ரயில்களும் வழக்கம் போல இயங்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News September 14, 2025
சென்னையில் தொடரும் சோகம்!

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளி பாஸ்கர், சென்னை கொரட்டூரில் கட்டட வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று கட்டடத்திற்கு கான்கிரீட் கூரை அமைக்கும்போது, இரும்பு கம்பிகளை தோளில் சுமந்து சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் பாஸ்கர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News September 14, 2025
சென்னையில் அர்ச்சகராக வாய்ப்பு

வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் புதிதாகத் தொடங்கப்பட்ட அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் 2025 – 2026ஆம் கல்வி ஆண்டிற்கான பகுதி நேர மாணவ சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பகுதி நேர வகுப்பில் பயில விரும்பும் மாணவ / மாணவியர் அதற்கான விண்ணப்பங்களை www.vadapalaniandavar.hrce.tn.gov.in, www.hrce.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து அக்.13க்குள் விண்ணப்பிக்கலாம்.
News September 14, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 13) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.