News April 18, 2024
தாம்பரம்: பொதுமக்கள் தவிப்பு

தாம்பரம் ரயில் நிலையம் அருகில் ஆவடி, திருபெருமந்தூர் செல்ல அரசு ஊழியர்கள் தனியார் நிறுவன ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். காரணம் சேர் ஆட்டோ மற்றும் தனியார் பஸ்களால் பொது மக்களுக்கு இடையூராக வாகனங்களை நிறுத்துகின்றனர் என்றும் அரசு உடனே நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News February 18, 2026
செங்கல்பட்டு: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் பகுதியில் (பிப்ரவரி 21) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தகுதியான இளைஞர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெற இந்த முகாம் பயனுள்ளதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முகாமில் கல்வித் தகுதி, அனுபவம் உள்ளிட்ட விவரங்களுடன் நேரில் பங்கேற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 18, 2026
செங்கல்பட்டு: கார் மோதி தூக்கி வீசப்பட்ட இளைஞர்

செய்யூர் அடுத்த கடுகுப்பட்டை சேர்ந்தவர் அங்கமுத்து (45), நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் கூவத்துார் மாநில நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது கடுகுப்பட்டு கிராமத்திற்கு திரும்பும் போது, எதிரே வந்த கார் இவரது பைக் மீது மோதியது. இதில், அங்கமுத்து தூக்கி வீசப்பட்டு, பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அணைக்கட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 18, 2026
செங்கல்பட்டு: சாலை தடுப்பில் மோதி வாலிபர் பலி

திருப்போரூர், விரால்பாக்கம் முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (24), இவர் நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் பைக்கில், செங்கல்பட்டு – திருப்போரூர் சாலையில் சென்றார். அப்போது கொட்டமேடு அருகே சாலை வளைவில், எதிர்பாராமல் சாலை மையத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே இறந்தார். திருப்போரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


