News October 25, 2025
தாம்பரம்: நிறுத்தப்பட்ட 6 ரயில் சேவை தொடக்கம்

தாம்பரம் ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக 6 மின்சார ரயில்களின் சேவை கடந்த ஜூன் மாதத்தில் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததால் நிறுத்தப்பட்ட ரயில் சேவை நாளை முதல் இயங்குமென தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரம் – கடற்கரை காலை 11:00, கடற்கரை – தாம்பரம் பகல் 11:52, 12:02, 12:15, செங்கை – கு.பூண்டி காலை 9:50, கடற்கரை – செங்கை பகல் 12:28.
Similar News
News January 26, 2026
செங்கல்பட்டு: GH-ல் இவை எல்லாம் இலவசம்!

செங்கல்பட்டில் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் செங்கல்பட்டு சுகாதார அதிகாரியிடம் 044-27431225 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.
News January 26, 2026
செங்கல்பட்டு: ஹோட்டல், டிபன் கடை தொடங்க ரூ.50,000

மத்திய அரசின் அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் மூலம் ஹோட்டல், டிபன் கடை, கேட்டரிங் தொழில் தொடங்க நினைக்கும் பெண்களுக்கு ரூ.50,000 கடன் வழங்கப்படுகிறது. இந்த கடன் தொகையை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் (36 மாதங்கள்) கால அவகாசமும் வழங்கப்படுகிறது. கடனுக்கான முதல் தவணையை செலுத்த தேவையில்லை. மேலும் தகவல்களுக்கு செங்கல்பட்டு அதிகாரியை (044 27420035, 9150056859) தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.
News January 26, 2026
செங்கல்பட்டில் கோர விபத்து; பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து

கேரளாவில் இருந்து வந்த பேருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு கோயம்பேடுக்கு செல்ல வேண்டிய சுமார் 18 பயணிகளுடன் தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. பல்லாவரம் அடுத்த திருநீர்மலை அருகே வரும்போது திடீரென பஸ்சின் முன்புற வலது பக்க டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சுமார் 10 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் 20 பேர் காயமடைந்தனர்.


