News August 18, 2025

தாம்பரம் – நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்

image

தாம்பரம் – நாகர்கோவில் இடையே பண்ருட்டி வழியாக இன்று (ஆக.18) அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி வண்டி எண் (06011) தாம்பரத்தில் இருந்து மாலை 3:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் பண்ருட்டி, சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர் வழியாக மறுநாள் காலை 5:15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

Similar News

News August 18, 2025

செங்கல்பட்டு: வங்கியில் வேலை, ரூ.93,000 சம்பளம்

image

மத்திய பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்கில் காலியாக உள்ள 250 மேனேஜர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதற்கு MBA முடித்த, 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.93,960 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து, வரும் ஆகஸ்ட் 25-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான எழுத்து தேர்வு சென்னையில் நடைபெற உள்ளது. வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 17, 2025

செங்கல்பட்டு இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, காவல்துறை இன்று இரவு ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு, மாமல்லபுரம், மற்றும் மதுராந்தகம் ஆகிய மூன்று வட்டங்களுக்குட்பட்ட ஒன்பது காவல் நிலையங்களில், துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) தலைமையில் காவல்துறையினர் ரோந்து செல்லவுள்ளனர்.

News August 17, 2025

ஆத்தூர் சுங்கச்சாவடியில் அனுமதி இலவசம்

image

தொடர் விடுமுறை முடிந்து தென் மாவட்டங்களிலிருந்து சென்னை திரும்பும் மக்கள் ஒரே நேரத்தில் படையெடுத்ததால், செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை சீரமைக்க, அங்குள்ள வாகனங்கள் கட்டணமின்றிச் செல்ல இலவசமாக அனுமதிக்கப்படுகின்றன. இதன் மூலம் நெரிசல் குறைந்து, போக்குவரத்து சீராகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!