News January 22, 2026
தாம்பரம் ஊர் காவல் படையில் பணிபுரிய வாய்ப்பு

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகர ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 29 ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் என மொத்தம் 32 காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ஊக்கமும் அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட பொதுநல தொண்டில் ஈடுபாடு உள்ள ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என காவல்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 23, 2026
திமுக ஆட்சி ஒரு பூஜ்ஜிய ஆட்சி – அன்புமணி ராமதாஸ்

மதுராந்தகத்தில் நடைபெறும் NDA பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தற்போது பேசி வருகிறார். அதில் பேசிய அவர், “தமிழகத்தில் 6 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகவும், 2021 தேர்தல் வாக்குறுதிகளில் 505-இல் வெறும் 66 வாக்குறுதிகளைதான் நிறைவேற்றியுள்ளனர்” எனவும் தெரிவித்தார். மேலும், திமுக ஆட்சியின் முடிவுக்கு இது ஒரு தொடக்கம் எனவும், இது ஒரு பூஜ்ஜிய ஆட்சி எனவும் தெரிவித்தார்.
News January 23, 2026
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி – நயினார் நாகேந்திரன்

மதுராந்தகத்தில் நடைபெறும் NDA பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள பிரதமர் மோடி வருகை புரிந்துள்ளார். இதில் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “ஆட்சி மாற்றம் நடப்பது உறுதி எனவும், இதற்காக வேலைகளை பிரதமர் மோடியும், இபிஎஸ்-ஸும் பார்த்து கொண்டிருக்கிறார்கள்” என தெரிவித்தார். மோடி ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
News January 23, 2026
மதுராந்தகம் வந்த பிரதமர் மோடி!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று (ஜன.23) தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேச உள்ளார். இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த மோடி, ஹெலிகாப்டர் மூலம் தற்போது மதுராந்தகம் வந்தடைந்தார். இதில் 5 லட்சம் தொண்டர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


