News November 15, 2024
தாமிரபரணி விவகாரத்தில் மேயர் எச்சரிக்கை

நெல்லை மேயர் ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், தாமிரபரணி நதியை மாசுப்படுத்துவது நம் வருங்கால சந்ததியினருக்கு நாம் இழைக்கும் அநீதியாகும். ஆகவே மாநகர பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் தங்கள் வளாகத்தில் உருவாகும் கழிவு நீரை சுத்திகரித்து மறு சுழற்சிக்கு உட்படுத்தவேண்டுகிறேன். விதிகளுக்கு முரணாக செயல்படுவோர் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.
Similar News
News March 6, 2026
திருநெல்வேலி: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <<-1>>கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். SHARE பண்ணுங்க
News March 6, 2026
நாங்குநேரி: கொலையானவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி

நாங்குநேரி அருகே பெரும்பத்து பகுதியில் 9 பேர் கொண்ட கும்பல் இரண்டு பேரை வெட்டி கொலை செய்தது. இதில் பலியான மாற்றுத்திறனாளி ஜான் குடும்பத்தினரை நாங்குநேரி தொகுதி முன்னாள் எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணன் நேற்று வீட்டில் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார். அதேபோல் வட மாநில தொழிலாளி திரிநாத் கட்டாவின் குடும்பத்தினருக்கும் நிதி உதவி வழங்கினார்.
News March 6, 2026
நெல்லை: 30 பேர் படுகொலை – பகீர் தகவல்!

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 30 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த பகுதியில் குறிப்பாக கொலை சம்பவங்கள் பரும அளவுக்கு அதிகரித்து வருகிறதாகவும், இவற்றில் பெரும்பாலானவை போதையில் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. நெல்லை, தூத்துக்குடியில் ஜன.மாதம் 13 கொலையும், பிப்.மாதம் 12 கொலையும் நடந்துள்ளது.


