News November 29, 2024
தாமிரபரணி நதியை பாதுகாக்கும் திட்டம் பரிசீலனையில் இல்லை!

மாசுபட்டு வரும் தாமிரபரணி நதியை பாதுகாக்கும் திட்டம் ஏதும் உள்ளதா என நெல்லை எம்பி ராபர்ட் புரூஸ் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய ஒன்றிய அமைச்சர் ராஜ் பூஷன் சவுத்ரி, தாமிரபரணி நதியை பாதுகாக்கும் திட்டம் ஏதும் பரிசீலனையில் இல்லை என கூறினார். நதிகளின் மாசுபாட்டை குறைக்கும் விதமாக நமாமி கங்கே என்ற திட்டம் செயல்படுகிறது என்று பதில் அளித்தார். SHARE IT.
Similar News
News August 21, 2025
பண மோசடி குறித்து நெல்லை காவல் துறை எச்சரிக்கை

வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி, பிக்சட் டெபாசிட் மற்றும் கடன்கள் தொடர்பான OTP விவரங்களைக் கேட்கும் மோசடி அழைப்புகள் அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் இத்தகைய அழைப்புகளுக்கு எந்த தகவலையும் அளிக்க வேண்டாம் என்றும், உடனடியாக அழைப்பை துண்டித்துவிட்டு, அருகில் உள்ள வங்கிக்கு நேரடியாக சென்று உறுதி செய்ய வேண்டும் என்றும் நெல்லை SP சிலம்பரசன் எச்சரித்துள்ளார்.
News August 20, 2025
நெல்லையில் அரசு பள்ளி மாணவனின் சாதனை

திருநெல்வேலி அரசு மாதிரிப் பள்ளியில் படித்த மாணவர் மணிகண்டன், 7.5% இட ஒதுக்கீடு இல்லாமல், நீட் தேர்வில் 522 மதிப்பெண்கள் பெற்று, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுள்ளார். அரசுப் பள்ளியில் படித்து, தனது சொந்த முயற்சியால் இந்தச் சாதனையைப் படைத்த தமிழ்நாட்டின் ஒரே மாணவர் இவரே. இவரின் இந்த வெற்றி, பலருக்கும் உத்வேகம் அளிக்கும்.
News August 20, 2025
நெல்லை: ரூ.1000 வரலையா CHECK பண்ணுங்க….

நெல்லை பெண்களே! கலைஞர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து 1000 வரலையா..? உங்க விண்ணப்ப படிவம் என்னாச்சுன்னு தெரியலையா?? கவலையை விடுங்க… இங்கு <