News December 10, 2024
தாமிரபரணி குடிநீர் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு

நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி உருவாகும் பகுதியான அகஸ்தியர் அருவி பகுதியில் கழிவு நீர் கலப்பதால் தாமிரபரணி தண்ணீர் குடிநீருக்கு உகந்ததல்ல என்பது அதிர்ச்சி அளிப்பதாக நேற்று(டிச.10) மதுரை உயர் நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது .தொடர்ந்து இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Similar News
News August 15, 2025
பாளையில் விபத்து ; 15 பேருக்கு தீவிர சிகிச்சை

பாளை ஆச்சிமடத்தில் இன்று அதிகாலை டெம்போ டிராவலர் வேனும் அரசு பஸ்சும் மோதி விபத்துக்குள்ளானது. பஸ்சில் இருந்த 15க்கும் மேற்பட்ட நபர்கள் பொதுமக்களால் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேன் ஓட்டுனர் சடலமாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். காயமடைந்த 15 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
News August 15, 2025
நெல்லை மக்களே சுதந்திர தின உறுதிமொழி!

நெல்லை மக்களே! இன்று 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாம் அனைவரும் இணைந்து சுதந்திர தினத்தை போற்றும் விதமாக வாக்காளர் அடையாள அட்டை சரிபார்த்தல், புது வாக்காளராக சேரும் பணிகளை செய்வோமா? பழைய வாக்காளர்கள் பட்டியலை சரிபார்க்க இங்கு <
News August 15, 2025
நெல்லையை சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசின் விருது

திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் பிரசண்ண குமார், நாங்குநேரி தாசில்தார் பாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் யமுனா ஆகியோர் நாங்குநேரி பகுதியில் இளைஞர்கள் திறன் மேம்பாடு, சமூக மாற்றத்திற்கு பணியாற்றியதற்காக இந்த ஆண்டின் தமிழக அரசின் நல்லாளுமை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இவளுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.