News March 29, 2025

தாமரை இலை பறித்தால் கடும் நடவடிக்கை

image

சுசீந்திரம் குளம், பறக்கை குளம், பால்குளம், தேரூர் குளம், மாணிக்கம் ஆகிய குளங்கள் பறவைகள் பாதுகாப்பு குளங்களாக உள்ளன. இக்குளங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் அதிகம் வந்து செல்கின்றன. இந்த குளங்களில் அளவுக்கு அதிகமாக தாமரைகள் வளர்ந்து காணப்படுகின்றன. இந்த தாமரைகளை பறவைகளுக்கு இடையூறாக பறிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நேற்று  மாவட்ட வன அதிகாரி தெரிவித்துள்ளார்.

Similar News

News April 6, 2025

முன்னாள் ராணுவ வீரர் போக்சோவில் கைது

image

நாகர்கோவில் வடசேரி பகுதியைச் சேர்ந்தவர் தங்கம்(59). முன்னாள் ராணுவ வீரரான இவர் 7 ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியிடம் ஆபாச செய்கை காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி இது குறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தங்கத்தை கைது செய்தனர்.

News April 5, 2025

எங்கள் லேடி ஆஃப் ரான்சம் சர்சின் பெருமைகள்

image

எங்கள் லேடி ஆஃப் ரான்சம் சர்ச், கிறிஸ்தவர்களின் புனித தளங்களில் ஒன்று ஆகும். இங்கு ஏழு புனித பழங்களைக் குறிக்கும் வகையில், தேவாலயம் ஏழு கதவுகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது. வருடம் தோறும் இங்கு வரும் பக்தர்கள் மெழுகு ஏத்தி வேண்டினால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இயேசு பிறந்த டிசம்பர் மாதம் இங்கு மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. ஷேர் பண்ணுங்கள்

News April 5, 2025

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் பலி 

image

கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் அம்முகுட்டி, இவர் இன்று காலை வீட்டுக்கு அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது மின் கம்பி அறுந்து தொங்கியபடி கிடந்ததை கவனிக்காத அம்முக்குட்டி கம்பியில் மேல் மிதித்துள்ளார். அப்போது தூக்கி வீசப்பட்ட அம்முகுட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

error: Content is protected !!