News January 2, 2026

தான்தோன்றிமலை: வயிற்று வலியால் நேர்ந்த சோகம்

image

கரூர், தான்தோன்றிமலை அருகே வடமாநிலத்தை சேர்ந்த அகமது தூபி என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த சில வருடங்களாக வயிற்று வலியின் காரணமாக இருந்த நிலையில் நேற்று மன விரக்தியில் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தான்தோன்றிமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News January 3, 2026

கரூர் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

கரூர் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான சிறப்பு முகாம்கள் இன்றும், நாளையும் நடைபெறுகின்றன.இதில் புதிய வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம் செய்தல் உள்ளிட்டசேவைகளை பெறலாம். voters.eci.gov.in இணையதளம், Voter Helpline App வழியாகவும் விண்ணப்பிக்கலாம். பிப்.17 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

News January 3, 2026

கரூர்: சித்தப்பாவுடன் முறையற்ற உறவு!பகீர் சம்பவம்

image

கோவையை சேர்ந்தவர் ரத்தீஷ் மனைவி இந்திராணி (26) என்பவர், கரூரில் பணியாற்றி வரும் அவரது சித்தப்பா வினோத்வுடன்(35) திருமானம் தாண்டிய உறவில் இருந்துள்ளார். இதனை கண்டித்ததால் ரத்தீஷை கொலை செய்துள்ளனர். இந்த வழக்கில் இந்திராணி கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று வினோத் மற்றும் கொலைக்கு உடந்தையாக செயல்பட்ட அரவக்குறிச்சியை சேர்ந்த சுரேஷ்(43) ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

News January 3, 2026

குளித்தலை அருகே வசமாக சிக்கிய தொழிலாளி!

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சூரியனூர் ஊராட்சி மேலப்பட்டியைச் சேர்ந்தவர் துரைராஜ் மகன் பாலமுருகன் (33). சென்ட்ரிங் தொழிலாளியான இவர் தனது வீட்டின் அருகே தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்களை வைத்திருந்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற நங்கவரம் போலீசார் கஞ்சா வைத்திருந்த பாலமுருகன் மீது வழக்கு பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 560 கிராம் கஞ்சா பொருட்களை பறிமுதல் செய்தனர்

error: Content is protected !!