News November 21, 2024
தாட்கோ மூலம் நிலம் வாங்குவதற்கு அழைப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடர்வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சார்பில், விவசாய தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் விவசாய நிலம் வாங்குவதற்கு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வாயிலாக குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், நிலம் வாங்குவதற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்ய வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.
Similar News
News August 22, 2025
காஞ்சிபுரம்: ITI, டிப்ளமோ போதும், சூப்பர் வேலை!

ஆவடியில் உள்ள ராணுவ வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் கீழ் எஞ்சின் தொழிற்சாலையில் தொழிற்பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு ITI, டிப்ளமோ & இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.18,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ளலாம். நேர்காணல் செபடம்பர் 15ம் தேதி நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க.
News August 22, 2025
காஞ்சிபுரம் ஆட்சியர் புதிய அறிவிப்பு

காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கும் தொழிற்சாலைகள் தங்கள் நிறுவனங்களில் பெயர் மாற்றம் உரிமையாளர் பெயர் மாற்றும், பதிவு போன்றவை இணையதளத்தில் பதிவு மேற்கொள்ள வேண்டும். இதற்கான ஆலோசனைக் முகாம் வரும் ஆக.23-ம் தேதி சிப்காட் மாம்பாக்கம் மற்றும் திருமுடிவாக்கத்தில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
News August 22, 2025
உழைக்காமல் பலன் பெற நினைப்பது ஊழல்: இபிஎஸ்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதியில் நேற்று இபிஎஸ் பிரச்சார பயணம் மேற்கொண்டார். அதில் உத்திரமேரூர் தொகுதிக்கு உட்பட்ட வாலாஜாபாத் பகுதியில் உரையாற்றிய போது, விஜய் ஒரு முறை கூட தேர்தலை சந்திக்கவில்லை. ஆசைப்படுவது தவறல்ல, ஆனால் இது, ஜனநாயக நாடு, அனைவருக்கும் உரிமையுண்டு. ஆனால் உழைக்காமல் பலன் பெற நினைப்பதே பெரும் ஊழல் என கடுமையாக குற்றம் சாட்டினர்.