News January 11, 2025

தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

image

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தொழில் நுட்ப பயிற்சியாளர் மற்றும் பிராட்பேண்ட்டெக்னிஷியன் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. இதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சி முடித்த உடன் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். ஆர்வமுள்ளவர்கள் இணையதளம் www.tahdco.com மூலம் பதிவு செய்யலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 19, 2025

BREAKING விருதுநகரில் 1,89,964 வாக்காளர்கள் நீக்கம்

image

விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நவ.4 அன்று தொடங்கி டிச.14 வரை நடைபெற்றது. இதனையடுத்து சற்றுமுன் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா வெளியிட்டார். இதில் 7 சட்டமன்ற தொகுதிகளில் 16,26,485 வாக்காளர்கள் இருந்த நிலையில் SIR க்கு பின்னர் வாக்காளர்களின் எண்ணிக்கை ஆக 14,36,521 ஆக உள்ளது. இதில் 1,89,964 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

News December 19, 2025

ஶ்ரீவி.,: பணம் மோசடி புகார்: கே.டி.ஆர் வழக்கு ஒத்திவைப்பு

image

பண மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் இருந்தும் தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தரப்பில் ஶ்ரீவி நீதிமன்றத்தில் கடந்த மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு முதன்மை மாவட்ட நீதிபதி வழக்கு விசாரணையை நவ.21-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ஜன.5.க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

News December 19, 2025

விருதுநகர்: டிகிரி தகுதி.. ரூ.64,820 சம்பளத்தில் வேலை!

image

பாங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் Credit Officers பணிகளுக்கான 514 உள்ள காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 25-40 வயதுக்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் நாளை (டிச.20) முதல் ஜன.5க்குள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.64,820 – ரூ.1,20,940 வரை வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் ஆட்கள் நியமனம் செய்யப்படுவர். டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!