News May 29, 2024

தாசில்தாருக்கு 10 ஆயிரம் அபராதம்

image

மதுரை சத்ய சாய் நகரை சேர்ந்த என்.ஜி.மோகன் கடந்த 2019ல் தேனி மாவட்டம் போடி தாலுகா அலுவலகத்திற்கு மேல சொக்கநாத கிராமத்தில் உள்ள நிலம் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். 1550 நாட்களாக பதில் அளிக்காததால் சென்னை தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த தமிழ்நாடு தகவல் ஆணையம் வட்டாட்சியருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்து அதிரடி காட்டியுள்ளது.

Similar News

News September 10, 2025

சுகாதார துறையில் வாய்ப்பு; விண்ணப்பிக்க இன்றே கடைசி

image

மதுரை மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம் & மாவட்ட காசநோய ஒழிப்பு திட்டத்தில் மருத்துவ ஆலோசகர், சிகிச்சை உதவியாளர் உள்ளிட்ட 17 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதி, விருப்பம் உள்ளவர்கள் இன்றுக்குள் (10.09.2025) மதுரை விஸ்வநாதபுரத்தில் உள்ள சுகாதார அலுவலகத்தில் நேரில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

News September 10, 2025

மதுரை: திருநங்கையருக்காக உருவாக்கப்படும் புதிய வீடுகள்

image

மதுரை மேற்கு ஒன்றியம் தேனுார் ஊராட்சியில் கட்டப்புளி நகரில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் 400 பேருக்கு இலவச வீடுகள் வழங்குவதற்காக, 10 ஏக்கருக்கும் கூடுதலான இடம் கையகப்படுத்தப்பட்ட முதற்கட்டமாக 194 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. வரும் டிசம்பருக்குள் பணிகள் முழுமையாக நிறைவு பெற்று முதல்வர் நேரில் இந்த வீடுகளை பயனாளிகளுக்கு திறந்து வைக்க உள்ளார்.

News September 10, 2025

மதுரை: மகனை குத்தி கொலை செய்த தந்தை

image

எழுமலை அருகே துள்ளுக்குட்டி நாயக்கனூரை சேர்ந்தவர் பாண்டி(45)யின், மனைவி உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். துக்கம் விசாரிக்க வந்த இவரது தந்தை மாரியப்பனுக்கும்(75), பாண்டிக்கும் நேற்று. இரவு தகராறு ஏற்பட்டபோது பாண்டி தந்தை மாரியப்பனை கட்டையால் தாக்க, ஆத்திரமடைந்த மாரியப்பன் தனது மகன் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் மாரியப்பனை கைது செய்தனர்.

error: Content is protected !!