News November 9, 2025

தவெக வெறும் அட்டை: மறைமுகமாக சாடிய உதயநிதி

image

ஊர்ல தாஜ்மகால், ஈபிள் டவர் செட் போட்டு EXHIBITION நடத்தினால் கூட்டம் கூடத்தான் செய்யும், ஆனால் அதெல்லாம் வெறும் அட்டை என விஜய்யை மறைமுகமாக உதயநிதி விமர்சித்துள்ளார். அப்படி போடப்பட்ட செட்டுகளுக்கு எந்த அஸ்திவாரமோ, கொள்கையோ கிடையாது என தெரிவித்த அவர், தட்டினால் அட்டை விழுந்துவிடும் எனவும் கூறியுள்ளார். ஆனால் திமுக என்பது தியாகத்தாலும் போராட்டத்தாலும் உருவான மாபெரும் கட்சி என கூறியுள்ளார்.

Similar News

News November 10, 2025

BREAKING: நாளை அனைத்து பள்ளிகளுக்கும்…

image

அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித் துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தாண்டின் கலைத் திருவிழா போட்டிகள் 1- 5ம் வகுப்பு மாணவர்களுக்கு(நவ.25) கரூர், 6 – 8ம் வகுப்பு மாணவர்களுக்கு(நவ.26) கிருஷ்ணகிரி, 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு(நவ.27, 28) சேலம், 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதுக்கோட்டையில் (நவ.27, 28) நடைபெறவுள்ளன. இதற்கான பணிகள் நாளை முதல் பள்ளிகளில் தொடங்க உள்ளன.

News November 10, 2025

தேர்தலுக்கு பிறகு SIR பணியை மேற்கொள்ள வேண்டும்: கமல்

image

சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் (SIR) ஏன் இவ்வளவு அவசரமாக செயல்படுத்தப்படுகிறது என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். SIR பணிகள் மேற்கொள்வதன் உள்நோக்கம் உண்மையில் வாக்காளர் பட்டியலை சரி செய்வதா அல்லது வேறு ஏதேனும் உள்ளதா என கேட்டுள்ளார். அவசரம் அவசரமாக இப்பணியை மேற்கொள்ளாமல், 2026 தேர்தல் முடிந்த பிறகு நிதானமாக சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணியை செயல்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

News November 9, 2025

இதை பற்றி கவலைப் படாதே நண்பா, நண்பி!

image

நீங்கள் என்ன செய்தாலும் ஒரு சிலர் விமர்சிக்க தான் செய்வார்கள். என்ன உடை அணிகிறீர்கள். என்ன வண்டி வைத்துள்ளீர்கள், என்ன சாப்பிடுகிறீர்கள் என எல்லாவற்றையும் பற்றி யாராவது ஒருவர் குறை சொல்லிக் கொண்டு தான் இருப்பார்கள். அதேபோல, உங்கள் கனவுகளை, லட்சியங்களை விமர்சிக்கதான் செய்வார்கள். அதனால், அடுத்தவர் அபிப்பிராயம் என்ன என்பதை நினைத்து கவலைப்படுவதை விட்டு, உங்க டார்கெட் நோக்கி செயல்பட தொடங்குங்கள்.

error: Content is protected !!