News August 21, 2025

தவெக மாநாட்டிற்கு செல்லும் வழியில் தொண்டர் பலி!

image

மதுரை தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு செல்லும் வழியில் தொண்டர் ஒருவர் மாரடைப்பால் பலியானார். தவெக மாநாட்டிற்காக சென்னையில் இருந்து புறப்பட்ட பிரபாகரன் என்பவர் சக்கிமங்கலம் என்ற இடத்தில் சிறுநீர் கழிக்க சென்றபோது மயக்கமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து அவரை மீட்டு, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News February 1, 2026

மதுரை: மாடியிலிருந்து விழுந்த தொழிலாளி பலி.!

image

மேலூரைச் சேர்ந்தவர் சரவணன் 57 கட்டட தொழிலாளியான இவர், ஜெய்ஹிந்த்புரம் தென்றல் நகர் பகுதியில் லட்சுமணன் என்பவர் வீட்டில் கட்டிடத்தில் வேலை செய்து வந்தார். ஜன.28ம் தேதி அன்று சரவணன் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்தார். அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 1, 2026

மதுரை : இலவச வக்கீல் சேவை Whatsapp எண்…!

image

மதுரை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News February 1, 2026

தெப்பத்திருவிழா: மதுரையில் போக்குவரத்து மாற்றம்

image

மதுரை மீனாட்சி அம்மனும், மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் எழுந்தருளும் தெற்கு திருவிழா (பிப்.1 ம் தேதி) நடைபெற உள்ளது.
மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிவிப்பு.
பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து முனிச்சாலைரோடு, விரகனூர் ரிங்ரோடு செல்லக்கூடிய அரசுப் பேருந்து பொதுமக்களின் வாகனங்கள் கணேஷ் தியேட்டர் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி குருவிக்காரன் சாலை வழியாக ரிங்ரோடு செல்லவேண்டும்.

error: Content is protected !!