News December 11, 2025

தவெக பரப்புரையில் வைரலான பெண் எஸ்பிக்கு கெளரவம்

image

புதுச்சேரி தவெக மக்கள் சந்திப்பின்போது, ஒரு டோக்கனுக்கு ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஆனால், ஒரு டோக்கனுக்கு இருவரை அனுமதிக்குமாறு புஸ்ஸி ஆனந்த் போலீஸிடம் வலியுறுத்தினார். அதற்கு, <<18511098>>SP ஈஷா சிங்<<>> ஆவேசமாக எச்சரித்தது கவனம் ஈர்த்தது. இந்நிலையில், விஜய் பரப்புரையில் சிறப்பான பாதுகாப்பு அளித்ததற்காக ஈஷா சிங்கிற்கு, அமைச்சர் நமச்சிவாயம் பொன்னாடை அணிவித்து சான்றிதழ் வழங்கியுள்ளார்.

Similar News

News December 11, 2025

ஒரே மாவட்டத்தில் 7,400 பேருக்கு HIV பாதிப்பு

image

பிஹாரின் சிதாமர்ஹி மாவட்டத்தில் 400-க்கும் அதிகமான குழந்தைகள் உள்பட 7,400-க்கும் மேற்பட்டோருக்கு HIV பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. திருமணத்திற்கு முன்பு ஆரோக்கிய தகுதியை சோதிக்காமல் இருத்தல், அதிகப்படியான புலம்பெயர்தல், குறைவான விழிப்புணர்வு உள்ளிட்டவையே இதற்கான காரணம் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து, பல்வேறு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

News December 11, 2025

BREAKING: வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

image

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்து, ₹90.33 என்ற மிகவும் குறைந்தபட்ச நிலையை அடைந்துள்ளது. இந்த சரிவு, இந்திய பொருளாதாரம் & சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர வாய்ப்புள்ளது. எனவே, ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்த, RBI முக்கிய முடிவுகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News December 11, 2025

தி.குன்றம் விவகாரம்: முதல் முறையாக தவெக கருத்து

image

திருப்பரங்குன்றம் விவகாரம் பற்றி முதல்முறையாக தவெக தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் TN அரசு தவறான வாதங்களை முன்வைத்ததாக CTR நிர்மல் குமார் விமர்சித்துள்ளார். அங்கு அரசு தான் அசாதாரண சூழலை ஏற்படுத்தியது என்ற அவர், பாரம்பரியமாக பின்பற்ற வேண்டிய முறைகளை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றார். இவரது கருத்து தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!