News January 7, 2026
தவெக தலைவர் விஜயை சாடிய எம்பி ரவிக்குமார்!

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நேற்று விசிக எம்பி ரவிக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விசிக தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் பங்குபெற்றனர். அப்போது, பேசிய எம்பி ரவிக்குமார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பாஜகவின் பிடியில் சிக்கித் தவிக்கிறார் என பேசினார்.
Similar News
News January 8, 2026
கள்ளக்குறிச்சியில் நடுரோட்டுக்கு வந்த மக்கள்!

சங்கராபுரம் அருகே சிவபுரத்தில் 38-க்கும் மேற்பட்டவர்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்த இடத்தை தங்களுக்கு பட்டா போட்டு தருமாறு வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், தங்களுக்கு விரைந்து பட்டா வழங்க வலியுறுத்தி நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் வந்து சமாதானம் செய்த பின்னர் கலைந்து சென்றனர்.
News January 8, 2026
கள்ளக்குறிச்சியில் பூட்டிய வீடுதான் TARGET – உஷார்!

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூா் அருகேயுள்ள டி.கீரனூரைச் சேர்ந்தவர் ராணி (55). இவா் கடந்த 5-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு, பெங்களூரு சென்றுள்ளார். நேற்று திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 4 பவுன் தங்கச் சங்கிலி, ரூ.1.20 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 8, 2026
கள்ளக்குறிச்சி: இரவு நேர ரோந்து பணி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஜனவரி 7-ம் தேதி இரவு முதல் நாளை (ஜன.08) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


