News April 14, 2025
தவெக சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாட்டம்

விழுப்புரம் நகரில் இன்று(ஏப்.14) பிற்பகல் தவெக கட்சி சார்பில் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர். தேசத் தியாகி அண்ணல் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு விழுப்புரம் தெற்கு இளைஞரணி பொருளாளர் ஹரி தலைமை தாங்கினார். பின் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
Similar News
News January 31, 2026
விழுப்புரம்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <
News January 31, 2026
விழுப்புரம்: 30 பேர் மீது அதிரடி வழக்கு!

அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விளைபொருட்களுக்கு சரியான விலை நிர்ணயம் செய்யாததைக் கண்டித்து, விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் திருக்கோவிலூர்-விழுப்புரம் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அனுமதியின்றி சாலை மறியல் செய்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக, போராட்டத்தில் ஈடுபட்ட 30விவசாயிகள் மீது அரகண்டநல்லூர் போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
News January 31, 2026
விழுப்புரம்: அடுத்தடுத்த அரங்கேறிய சம்பவங்கள்

திருவெண்ணெய்நல்லூர் அருகே சரவணம்பாக்கம் கூட்ரோடு பகுதியில் அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை நடந்துள்ளது. ஜூஸ் கடை உரிமையாளர் சக்கரபாணி வீட்டில் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், 3.5 பவுன் நகை மற்றும் பணத்தைத் திருடினர். அதேபோல், தனியார் பள்ளி ஆசிரியை அபர்ணா வீட்டில் 2.5 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. ஒரே நாளில் நடந்த இந்தத் துணிகரத் திருட்டு சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


