News March 2, 2026
தவெக கூட்டணி முடிவு எப்போது? செங்கோட்டையன்

மக்கள் சந்திப்பு, நிர்வாகிகள் கூட்டம் என தவெகவும் ஒருபுறம் சுழன்றுகொண்டுதான் இருக்கிறது. ஆனால், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என அறிவித்தும் தவெகவுடன் இதுவரை பெரிய அளவிலான கூட்டணி அமையவில்லை. இந்நிலையில், தவெக கூட்டணி குறித்த அறிவிப்பை விஜய் விரைவில் வெளியிடுவார் என்றும், அது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும் என்றும் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். உங்கள் கருத்து என்ன?
Similar News
News April 8, 2026
செல்போனுக்கு இலவச ரீசார்ஜ்.. புதிய தேர்தல் வாக்குறுதி

தேர்தலுக்கு 2 வாரங்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரங்கள், புதிய வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றன. அந்த வகையில், மதுரை(வ) தொகுதியில் வெற்றி பெற்றால், அங்குள்ள கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்கி மாதந்தோறும் ரீசார்ஜ் செய்வேன் என அதிமுக வேட்பாளர் சரவணன் வாக்குறுதி அளித்துள்ளார். முன்னதாக ‘சரவணா காப்பீடு’ எனும் இலவச மருத்துவ திட்டத்தையும் அவர் அறிவித்திருந்தார்.
News April 8, 2026
திமுகவின் ஆதிக்கத்தில் ECI அதிகாரிகள்: சசிகலா

ECI அதிகாரிகள் ஆளுங்கட்சியின் ஆதிக்கத்தில் செயல்படுவதாக சசிகலா சாடியுள்ளார். மதுரை பரப்புரையில் பேசிய அவர், எதிர்கட்சியினரை போட்டியிட விடாமல் தடுக்கும் வகையில் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன என்றும் குற்றம்சாட்டினார். மேலும், மக்களை ஏமாற்றும் மன்னராட்சியை அகற்றி உண்மையான மக்களாட்சியை கொண்டுவர வேண்டும் என்றும் சசிகலா வலியுறுத்தினார்.
News April 8, 2026
விசிலடிப்பவர்கள் பேரவைக்கு வேண்டாம்: திருமா

சமூகநீதிக்கு எதிரான சங்பரிவார் கும்பல் தமிழகத்துக்கு வேண்டாம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். கடலூர் பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், இது உ.பியோ, ம.பியோ அல்ல; பெரியார் மண் என தெரிவித்தார். மேலும், விசிலடிப்பவர்களை தியேட்டருக்கு அனுப்புங்கள், பேரவைக்கு அனுப்ப வேண்டாம் என்று தவெகவை மறைமுகமாக விமர்சித்துள்ளார். திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெல்ல பாடுபட வேண்டும் என வலியுறுத்தினார்.


