News March 30, 2026
தவெக கட்சியினர் பால்வாடிகள்: சேகர் பாபு

விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் தவெகவின் செயல்பாட்டை சேகர் பாபு கிண்டலடித்து பேசியுள்ளார். பிரசாரத்துக்கு எப்படி அனுமதி வாங்க வேண்டும் என்பது கூட தெரியாத பால்வாடிகள்(தவெகவினர்) என விமர்சித்த அவர், இவர்கள் எப்படி தேர்தலை சந்தித்து ஆட்சி அமைப்பார்கள் என சாடியுள்ளார். மேலும், மே 4-ம் தேதி அனைத்துக்கும் தீர்ப்பு கிடைத்துவிடும் என்றார்.
Similar News
News April 7, 2026
குறுக்கு வழியில் எதிரிகளின் கீழ்தரமான செயல்: சுந்தர்.சி

தேர்தலில் வெற்றிபெற்றால் மதுரை மத்திய தொகுதியில் ‘இறைச்சி கடைகளை மூடுவேன்’ என தான் கூறியதாக வெளியாகும் செய்தி முற்றிலும் போலியானது என சுந்தர்.சி தெரிவித்துள்ளார். மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் மதிக்க தெரிந்தவன் நான் என்பது மக்களுக்கே தெரியும். போட்டியை நேரடியாக எதிர்கொள்ள தைரியமின்றி குறுக்கு வழியை நாடுவோரின் இதுபோன்ற கீழ்தரமான செயல்களுக்கு வெற்றியால் பதிலடி தருவோம் என கூறியுள்ளார்.
News April 7, 2026
தமிழகத்தில் இத்தனை பேர் வேட்பு மனு தாக்கலா?

2026 தேர்தலில் போட்டியிட 7,594 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய தினமே வேட்பு மனு பரீசிலனை நடைபெற்று, மாலைக்குள் தள்ளுபடியாகும் வேட்பு மனுக்களின் விவரங்கள் தெரியவரும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் ஏப்.9 ஆகும். இதன்படி, அன்றைய நாள் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும். ஏப்.23-ல் தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
News April 7, 2026
சுங்கச்சாவடிகளில் இனி No Cash.. அரசு அதிர்ச்சி அறிவிப்பு

சுங்கச்சாவடிகளில் இனி ரொக்கம் செலுத்தும் முறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் 10-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது. அன்று முதல் FASTag, UPI முறைகளில் மட்டுமே பணப் பரிவர்த்தனை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. FASTag இல்லையெனில் சுங்கச்சாவடியை கடக்க UPI மூலம் பணம் செலுத்தலாம். ஆனால், வழக்கமான கட்டணத்தை விட 1.25 மடங்கு கூடுதலாக செலுத்த வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. ALERT


