News December 18, 2025
தவெக ஒரு கொலைகார சக்தி: TKS இளங்கோவன்

திமுக ஒரு தீய சக்தி என <<18602926>>விஜய்<<>> கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், கரூரில் 41 பேரை கொன்ற தவெக ஒரு கொலைகார சக்தி என்று TKS இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார். கரூரில் தாமதமாக வந்ததற்கான காரணத்தை இதுவரை விஜய் தெரிவிக்கவில்லை என்றும் அவர் சாடினார். அதேநேரம், மக்களுக்காகவே பணியாற்றுகிற ஒரு தூய சக்தியாக திமுக விளங்குவதாகவும் TKS கூறியுள்ளார். உங்கள் கருத்து என்ன?
Similar News
News December 24, 2025
மெடிக்கல் ஷாப்களில் QR CODE.. ஏன் தெரியுமா?

சமீபத்தில் தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட <<18010995>>இருமல்<<>> மருந்தை குடித்ததால் ம.பி.,யில் குழந்தைகள் உயிரிழந்தனர். இந்நிலையில், மருந்துகளால் உண்டாகும் பக்கவிளைவுகள் குறித்து அரசுக்கு புகாரளிக்க மெடிக்கல் கடைகளில் ‘QR CODE’ வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் வரும் புகார்கள் பற்றி உடனடியாக விசாரித்து, சம்பந்தப்பட்ட மெடிக்கல் கடை (அ) மருந்து உற்பத்தி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News December 24, 2025
பாசிச சக்திகளால் எதுவும் செய்ய முடியாது: CM ஸ்டாலின்

சமத்துவத்தை விரும்பும் சக மனிதர்களை சகோதர சகோதரிகளாக நினைக்கும் மக்களே பெரும்பான்மையாக உள்ளோம் என CM ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய அவர், ஜனநாயகத்தில் இந்த வலிமைமிக்க சக்திகள் ஒன்று சேர்ந்து, மக்களும் அதற்கு ஆதரவாக இருக்கும்போது எந்த பாசிச சக்திகளாலும் தமிழகத்தை ஒன்றும் செய்ய முடியாது என குறிப்பிட்டார்.
News December 24, 2025
ஜனநாயகன் ரிலீஸாவதில் சிக்கலா?

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தை ஆந்திரா, தெலங்கானாவில் வெளியிடவிருந்த நிறுவனங்கள் திடீரென பின்வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், பாலிவுட் மாநிலங்களிலும் பட புரமோஷன் சரியாக செய்யாததால், அங்கும் ரிலீஸில் சிக்கல் ஏற்படலாம் என தெரிகிறது. இவையெல்லாம் உண்மையானால் பாக்ஸ் ஆபிஸில் பின்னடைவை சந்திக்க வாய்ப்புள்ளது. எனவே, இதையெல்லாம் உடனடியாக படக்குழு சரிப்படுத்த வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


