News December 29, 2025
தவெகவை நெருங்குகிறதா காங்கிரஸ்? KAS ரியாக்ஷன்!

TN கடன் குறித்து காங்கிரஸ் நிர்வாகியான <<18699142>>பிரவீன் சக்ரவர்த்தி<<>> திமுக அரசை விமர்சித்தது சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய KAS, தவெகவுடன் காங்கிரஸ் இணைய வேண்டும் என அக்கட்சியின் நிர்வாகிகள் பலர் பல இடங்களில் கருத்து பரிமாறி வருகிறார்கள். ஆனால் அவை என் கவனத்துக்கு கொண்டு வரப்படவில்லை. அவை கவனத்திற்கு வந்தால் அதுகுறித்து பதிலளிப்போம் என கூறியுள்ளார்.
Similar News
News December 29, 2025
தவெக பக்கம் செல்கிறதா ராமதாஸ் தரப்பு?

சேலத்தில் நடைபெற்ற ராமதாஸ் தலைமையிலான பாமக பொதுக்குழுவில் பேசிய காந்திமதி, ஆட்சி மாற்றம் ஏற்படும் என கூறியுள்ளார். அத்துடன், ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்துள்ளார். இதனால், ராமதாஸ் தரப்பு அறிவாலயம் (திமுக) செல்லும் என கூறப்பட்ட நிலையில், அதிகாரத்தில் பங்கு என்ற அழைப்பை வாசலிலேயே வைத்திருக்கும் பனையூர் (தவெக) நோக்கி செல்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கூட்டணி அமையுமா?
News December 29, 2025
குளோப் சாக்கர் விருதுடன் ரொனால்டோ

துபாயில் நடந்த குளோப் சாக்கர் விருது நிகழ்ச்சியில் நட்சத்திர வீரர் ரொனால்டோவுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதாவது, இந்த ஆண்டின் தலைசிறந்த மத்திய கிழக்கு வீரருக்கான குளோப் சாக்கர் விருது ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய அவர், 40 வயதானாலும் தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதே ஆசை என்றும், சர்வதேச அளவில் 1,000 கோல்களை அடிக்க வேண்டும் என்ற கனவை நோக்கி பயணிப்பதாகவும் கூறினார்.
News December 29, 2025
ஜனநாயகன் படம் இதைதான் பேசுது: பிரஜின்

குட் டச், பேட் டச் பற்றி தான் விஜய்யின் ஜனநாயகன் படம் பேசுவதாக நடிகர் பிரஜின் தெரிவித்துள்ளார். ஜனநாயகன் திரைப்படம் பாலையாவின் பகவந்த் கேசரியின் ரீமேக் தான் என உறுதியாக கூறினார். மேலும் பள்ளிகளில் செக்ஸ் கல்வி அவசியம் என்றும், அங்கு எந்தளவுக்கு சொல்லிக் கொடுக்கிறார்களோ அந்தளவுக்கு தவறுகள் குறையும் எனவும் பேசிய அவர், பெற்றோர்களும் அதனை சொல்லி கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


