News February 27, 2026

தவெகவுக்கு No.. நாளை திமுக – காங்., பேச்சுவார்த்தை

image

தவெகவுடன் காங்., மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகவும், இதனாலேயே ராகுல் காந்தி தமிழக பயணத்தை தள்ளி போட்டுக்கொண்டே செல்வதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், நாளை திமுக – காங்., தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதனால், இந்த கூட்டணி உறுதியாகிவிட்டதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். 30+ சீட்களை கேட்க காங்., விருப்பம் தெரிவிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Similar News

News February 27, 2026

நான் சொன்னதும் விஜய் செய்தார்: EX அமைச்சர்

image

தான் கூறியதற்கு பிறகே வேலூர் தவெக கூட்டத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டது என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். அதேநேரம், அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களுக்கு தமிழக அரசு நெறிமுறைகள் வகுத்தது பாராட்டுக்குரியது என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், திமுக அரசுக்கு ஆதரவாக சீனிவாசன் பேசியது பேசுபொருளாகியுள்ளது

News February 27, 2026

MLA பதவியை ராஜினாமா செய்த OPS, ஐயப்பன்!

image

திமுகவில் இணைந்த பிறகு தலைமைச் செயலகம் சென்ற OPS, ஐயப்பன் தங்களது MLA பதவியை ராஜினாமா செய்தனர். இருவரும் சட்டப்பேரவை செயலாளரிடம் தங்களது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளனர். இன்று, 9:30 – 10:30 நல்ல நேரம் என்பதால் ராஜினாமாவுக்கு முன்னர் திமுகவில் இணைந்துள்ளார். கோபி, ஒரத்தநாடு, ஆலங்குளம், வால்பாறை, சேந்தமங்கலம் தொகுதிகளை தொடர்ந்து போடி, உசிலம்பட்டி ஆகிய 7 தொகுதிகள் தற்போது காலியாகியுள்ளன.

News February 27, 2026

கூச்சமே இல்லையா OPS? அதிமுக

image

டீக்கடை நடத்தி வந்த OPS-ஐ CM-ஆக ஆக்கியது இந்த இயக்கம் தான் என அதிமுக பதிவிட்டுள்ளது. OPS உள்ளே இருந்தும், உபியாகவே இருந்தார், MGR மாளிகையில் கருணாநிதி புத்தகம் படித்துக்கொண்டிருந்தார் என விமர்சித்துள்ள அக்கட்சி, அவர் நடத்திய நாடகமெல்லாம் அம்பலப்பட்டதால் ஓனர்(திமுக) வாசப்படிக்கே போய்விட்டார் என சாடியுள்ளது. மேலும், இந்த கருமத்துக்கு தர்மயுத்தம் வேறயா என காட்டமாக பதிவிட்டுள்ளது.

error: Content is protected !!