News January 25, 2026
தவெகவுக்கு 40% ஓட்டு: CTR நிர்மல்குமார்

ஆளுங்கட்சியின் குற்றங்களை தேர்தல் அன்று விசில் ஊதி மக்கள் வெளிப்படுத்த தயாராகி வருவதாக CTR நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். அக்கட்சியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், TN-ல் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் தவெகவுக்கு ஒரு வாக்கு இருப்பதாகவும், அண்மையில் திமுகவுக்கு தேர்தல் வேலை செய்யும் நபர் ஒருவர், தவெகவுக்கு 40% வாக்குகள் கிடைக்கும் என தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்தார்.
Similar News
News February 1, 2026
பயங்கரவாதிகள் தாக்குதல்.. 125 பேர் பலி!

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பலூசிஸ்தான் பகுதியில், ராணுவத்திற்கும் BLA கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்த தாக்குதலில் 125 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 12 நகரங்களில் நடந்த தாக்குதலில், 18 பாதுகாப்புப் பணியாளர்களும், 15 மக்கள், 92 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பலூசிஸ்தானுக்கு இந்தியா உதவுவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டிய நிலையில், அதனை இந்தியா மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News February 1, 2026
டீச்சருக்கு 161 ஆண்டுகள் சிறை தண்டனை.. அதிர்ச்சி பின்னணி!

ஆட்டிசம் பாதித்த சிறுவனை (10) பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் டீச்சருக்கு 161 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் சிறப்பு பள்ளியில் படித்து வந்த சிறுவனை, ஆசிரியர் சந்தோஷ் குமார்(56) பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுவன் எழுதியும், வரைந்தும் காட்டியுள்ளான். பெற்றோர் அளித்த புகாரில், கேரள விரைவு நீதிமன்றம் ₹87,000 அபராதத்துடன், 161 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்துள்ளது.
News February 1, 2026
ரசிகர்களை மட்டுமே விஜய் நம்பவில்லை: அருண்ராஜ்

ஊழல் சக்தியுடன் விஜய் கூட்டணி அமைக்காமல் இருப்பதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் என அருண்ராஜ் தெரிவித்துள்ளார். விஜய் வெறும் ரசிகர்களை மட்டும் நம்பி அரசியலுக்கு வரவில்லை என்றும் மக்களின் பேராதரவுடன்தான் களத்திற்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆட்சியில் பங்கு என்பது கட்சியின் கொள்கை முடிவு என்றும், கூட்டணி கட்சிகள் வரும் என்ற நம்பிக்கையில் விஜய் கட்சி ஆரம்பிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.


