News November 22, 2025
தவெகவில் Cold War நடக்கிறதா?

தவெகவில் கோஷ்டி அரசியல் கொடிகட்டி பறப்பதாக பேசப்படுகிறது. ஆரம்பத்தில் விஜய்க்கு அனைத்துமாய் இருந்த புஸ்ஸி ஆனந்தின் நிலை தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறதாம். காரணம், ஆதவ், நிர்மல் குமார் இருவரும் ஆளுக்கு ஒரு அரசியல் செய்கிறார்களாம். இதனால், ஆனந்த் மீதான லைம் லைட் குறைந்து வருவதாக பார்க்கப்படுகிறது. எனவே, அதிகாரத்தை தக்கவைக்க கட்சிக்குள் Cold War நடப்பதாக தவெகவினர் கூறுகின்றனர்.
Similar News
News January 29, 2026
தொண்டர்களின் விருப்பமாக கூட்டணி அமையும்: பிரேமலதா

கூட்டணி குறித்து உரிய நேரத்தில் தலைமை கழகத்தில் இருந்து அறிவிப்பேன் என பிரேமலதா தெரிவித்துள்ளார். புளியங்குடியில் பேசிய அவர், கடைக்கோடி தொண்டர்களின் விருப்பத்தின் படியே இந்த முறை கூட்டணி அமையும் என்றும், நாம் இடம்பெறும் கூட்டணி தான் இந்தமுறை ஆட்சி அமைக்கும் எனவும் கூறினார். அப்போது அங்கிருந்த தொண்டர்கள் சிலர், தவெக தவெக என கோஷமிட்டதால் அப்பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.
News January 29, 2026
பாரதிதாசன் பொன்மொழிகள்

*கலை உயர்ந்து இருக்க, எண்ணங்களும் உயர்ந்து இருக்க வேண்டும். புதியதோர் உலகம் செய்வோம் கெட்டபோரிடும் உலகத்தை சாய்ப்போம். *செயலை செய்ய எண்ணித் துணிபவனுக்கே வெற்றி கிடைக்கும். *எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு. *நன்மை கொடுக்கும் கல்வி இல்லாத வீடு இருண்ட வீடு!
News January 29, 2026
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது: EPS

சென்னை தரமணியில் பீகார் மாநில இளைஞர், அவரது மனைவி மற்றும் 2 வயது குழந்தை ஆகிய மூவரும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக EPS தெரிவித்துள்ளார். மேலும், இச்சம்பவம் வந்தாரை வாழவைக்கும் TN-ல் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி சந்தி சிரிக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காட்டுவதாகவும், இந்த கொடூர கொலைகளுக்கு பொம்மை CM என்ன சொல்ல போகிறார் என்றும் விமர்சித்துள்ளார்.


