News December 11, 2025
தவெகவில் வைத்திலிங்கம் இணைய மாட்டார்: டிடிவி

உறுதியாக சொல்கிறேன், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தவெகவில் இணைய மாட்டார் என்று டிடிவி தெரிவித்துள்ளார். இந்த செய்தி வெளியான உடனே, தவெகவில் இணைய ஆசைப்படுகிறீர்களா என தொலைபேசியில் அழைத்து அவரிடம் கேட்டேன். அதற்கு ஏன் இப்படி வதந்தி பரப்புகிறார்கள் என வருத்தப்பட்டார் எனக் கூறிய டிடிவி, அவரை காயப்படுத்துவது போல் இதுபோன்று பரப்பாதீர்கள் என கேட்டுக்கொண்டார்.
Similar News
News December 14, 2025
சங்கரன்கோவிலில் ஒன்றரை வயது ஆண் குழந்தை பலி

சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜான் கிறிஸ்டோபர் (36). இவரது 1½ வயது ஆண் குழந்தை தீரன் நேற்று முன்தினம் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தான். குழந்தையை உடனைடியாக குடும்பத்தார் மீட்டு சங்கரன்கோவில் G.H-லும், மேல் சிகிச்சைக்காக பாளை G.H-க்கும் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று குழந்தை தீரன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து சங்கரன்கோவில் போலீசார் விசாரணை.
News December 14, 2025
குடற்புழுக்கள் வராமல் தடுக்க இதை பண்ணுங்க!

அசுத்தமான நீர் அல்லது உணவை உட்கொள்வது, சுகாதாரமற்ற கழிப்பறையை பயன்படுத்துவதால் குடற்புழுக்கள் உருவாகின்றன. இதனால் வயிற்றுவலி, வாந்தி, மலச்சிக்கல் ஏற்படும். இதைத் தடுக்க நாம் *நகங்களை சரியாக வெட்ட வேண்டும் *டவல்களை சூடான நீரில் சுத்தம் செய்தல் *அசுத்தமான இடங்களில் வெறும் காலில் நடப்பதை தவிர்த்தல் *செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்துதல் *சுகாதாரமற்ற இடங்களில் காய்கறிகள் வாங்குவதை தவிருங்கள்.
News December 14, 2025
BREAKING: புதிய கட்சியை தொடங்கினார் ஓபிஎஸ்

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை, கழகமாக OPS மாற்றியுள்ளார். மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் டிச.23-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும். இதில், அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுவரை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என அறிக்கை வெளியிட்ட OPS, அதனை அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் (கட்சி) என மாற்றியுள்ளார்.


