News November 25, 2025
தவெகவில் செங்கோட்டையன்? நீடிக்கும் சஸ்பென்ஸ்!

<<18380211>>Ex அமைச்சர் செங்கோட்டையன்<<>> தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படும் செய்திதான் TN அரசியலில் 2 நாள்களாக பேசுபொருளாகியுள்ளது. இது தொடர்பாக விளக்கம் கேட்க WAY2NEWS, செங்கோட்டையன் தரப்பினரை தொடர்பு கொண்டபோது அவர்கள் இந்த தகவலை மறுக்கவில்லை. பின்னர் பேசுகிறோம் என்றனர். செய்தியாளர்களிடம் பேசிய CTR நிர்மல்குமாரிடம் இது குறித்து கேள்வி எழுப்பியபோது, அவரும், இது பற்றி பின்னர் பேசுகிறோம் என சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.
Similar News
News April 5, 2026
தங்கம் கொள்முதலை RBI பாதியாக குறைத்தது!

தங்கம் கொள்முதலை RBI குறைத்துள்ளது. உலகத் தங்க கவுன்சிலின் சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் துருக்கி 8 டன், ரஷ்யா 6 டன் தங்கத்தை விற்பனை செய்துள்ளன. 2025-ம் ஆண்டில் மாதத்திற்கு சராசரியாக 26 டன் தங்கம் கொள்முதல் செய்த RBI, இந்தாண்டின் முதல் 2 மாதங்களில் மாதத்திற்கு 12.5 டன் மட்டுமே வாங்கியுள்ளது. ஈரான் – இஸ்ரேல் போர் தொடங்கிய பிறகு தங்கம் விலை மந்தநிலையில் நீடித்து வருகிறது.
News April 5, 2026
EPS வதந்தி வாந்தி எடுக்கிறார்: ஸ்டாலின்

EPS சொல்லும் பொய்களை வைத்து புத்தகமே போடலாம், சங்கிகள் கூட்டத்தில் சேர்ந்ததால் அவர்களை போன்றே வாட்ஸ்அப் வதந்திகளை வாந்தி எடுக்கிறார் என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார். விருதுநகர் பரப்புரையில் பேசிய அவர், விசுவாசத்திற்கு கட்டப்பா என்றால், துரோகத்திற்கு EPS என தெரிவித்துள்ளார். அவர் செய்த துரோகத்தை எண்ணிவிட முடியாது; ஆனால் தோல்விகளை எண்ணிவிடலாம், இப்போது 10, தேர்தலுக்கு பின் 11 என்றும் சாடியுள்ளார்.
News April 5, 2026
கணவரின் நண்பருடன் மனைவி.. தகாத உறவு கொடூரம்!

வேலூர், ஒடுகத்தூரில் தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் காதல் கணவனை தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்த மனைவி போலீசில் சிக்கியுள்ளார். பெங்களூருவில் மேஸ்திரி வேலை செய்து வந்த கிருஷ்ணமூர்த்தி, அவரது நண்பர் அன்பழகனை மனைவிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். நாளடைவில் தகாத உறவாக மாறவே மோனிஷாவும், அன்பழகனும் சேர்ந்து கிருஷ்ணமூர்த்தியை கொலை செய்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர். So Sad!


