News December 10, 2025

தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்

image

2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நெல்லை தெற்கு மாவட்ட தவெக வர்த்தக அணி அமைப்பாளர் வடிவேல் முருகன், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கிரகாம்பெல் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருடன் 50-க்கும் மேற்பட்ட தவெக தொண்டர்கள் திமுகவில் இணைந்தனர்.

Similar News

News April 1, 2026

இன்றைய நல்ல நேரம்

image

ஏப்ரல் 1, பங்குனி 18 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: சதுர்தசி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்

News April 1, 2026

கடற்படையில் வேலை.. ஐ.டி.ஐ தகுதி போதும்

image

கொச்சி துறைமுகத்தில் கடற்படை கப்பல் பழுதுபார்க்கும் தளம், கடற்படை விமான தளத்தில் 240 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அப்ரண்டீஸ் பிரிவில் உள்ள பிட்டர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், வெல்டர் பணிகளுக்கு ஐ.டி.ஐ கல்வித்தகுதி போதுமானது. சான்றிதழ் சரிபாா்ப்பு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். ஏப்.17-க்குள் இந்த <>லிங்க்கில்<<>> உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.

News April 1, 2026

எலும்புகளின் வலிமைக்கு தொய்யல்கீரை சாப்பிடுங்க

image

வயல்வெளிகளின் ஓரங்களில் வளரக்கூடிய தொய்யல்கீரை உடலுக்கு குளிர்ச்சியூட்டும் என சித்தா டாக்டர்கள் கூறுகின்றனர். புரதம், நார்ச்சத்து, கால்சியம், ஃபோலேட் உள்ளிட்ட சத்துகளை அடக்கிய தொய்யல்கீரை உடலில் ரத்தத்தை சுத்தம் செய்யும், சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தும், நாடி நரம்புகளை வலுவாக்கும், மலச்சிக்கலை தீர்க்கும். இதில் ஃபோலேட் அதிகம் இருப்பதால் குழந்தையின் மூளை வளர்ச்சி, எலும்பு வளர்ச்சிக்கு உதவும்.

error: Content is protected !!