News December 6, 2025
தவெகவில் இணைந்தவுடன்.. விஜய் போட்ட உத்தரவு

நேற்று தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்தை, தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய விஜய் அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து, நாஞ்சில் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவிலான பொதுக்கூட்டங்களை நடத்த தவெக மாவட்ட செயலாளர்கள் முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. பொதுக்கூட்டங்களில் தவெக கொள்கை, விஜய் வெற்றிபெற்றால் மக்களுக்கு என்னென்ன செய்வார், திமுக ஆட்சியில் உள்ள குறைபாடுகள் குறித்து அவர் பேசவிருக்கிறாராம்.
Similar News
News March 3, 2026
அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவு செய்யாது ஏன்?

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் ₹1,020 கோடி ஊழல் நடந்தது என்ற புகாரின் அடிப்படையில் அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிய ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை. இதை எதிர்த்து, அதிமுகவின் இன்பதுரை தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இன்றைய விசாரணைக்கு பின் வழக்குப்பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News March 3, 2026
சற்றுமுன்: காய்கறிகள் விலை குறைந்தது

வரத்து அதிகரிப்பால் காய்கறிகளின் விலை குறைந்துகொண்டே வருகிறது. மார்க்கெட் நிலவரப்படி, முருங்கைக்காய் ₹10 குறைந்து 1 கிலோ ₹50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கேரட், முள்ளங்கி, காலிஃபிளவர், மிளகாய் ஆகிய காய்கறிகளின் விலை கிலோவுக்கு ₹5 – ₹10 ரூபாய் வரை குறைந்து முறையே ₹20, ₹10, ₹12, ₹60 என விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
News March 3, 2026
திமுக கூட்டணியில் காங்., நீடிக்குமா? இன்று இறுதி முடிவு

ராஜ்யசபா பதவி எல்லாம் தேவையில்லை 2016 -ல் தங்களுக்கு கொடுத்த 41 இடங்களை இந்த தேர்தலிலும் கொடுங்கள் என்று காங்., பேச்சுவார்த்தை குழு, திமுகவிடம் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கு திமுக ஒப்புக்கொள்ளவில்லையாம். இதனால், திமுக கூட்டணியில் காங்., தொடருமா அல்லது விலகுமா என்ற பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில்,கே.சி.வேணுகோபால், கிரிஷ் சோடங்கர் இன்று சென்னை வருவதாக கூறப்படுகிறது.


