News January 17, 2026
தவெகவில் இணைகிறாரா முன்னாள் மத்திய அமைச்சர்?

தஞ்சையில் நடந்த மகளிர் மாநாட்டில் புறக்கணிக்கப்பட்டதால், திமுக முன்னாள் மத்திய இணை அமைச்சர் S.S.பழனிமாணிக்கம், தவெகவில் இணையவிருப்பதாக தகவல் பரவியது. இந்நிலையில், தன்னை அடையாளப்படுத்தியது திமுகதான். வரும் தேர்தலில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கினால் போட்டியிடுவேன், இல்லையென்றால் தேர்தல் வெற்றிக்காக பாடுபடுவேன். என் உயிர் மூச்சு உள்ளவரை திமுகதான் என்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Similar News
News January 29, 2026
திமுகவுடன் கூட்டணி.. இறுதியாக அறிவித்தார்

2026 தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக ‘புதிய திராவிட கழகம்’ கட்சியின் (PDK) தலைவர் எஸ்.ராஜ்குமார் அறிவித்துள்ளார். கொங்கு மண்டலத்தில் தங்களுக்கு 3 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று திமுக தலைமையிடம் கேட்டுள்ளதாகவும், பிப்ரவரி 2-ம் வாரத்தில் இருந்து மாநிலம் முழுவதும் தொகுதி வாரியாக மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தை PDK நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News January 29, 2026
BREAKING: அண்ணாமலைக்கு புதிய பதவி

காரைக்குடி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். தொகுதி பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படாத நிலையிலும், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால் காரைக்குடியில் பாஜக களமிறங்க திட்டமிட்டுள்ளது. அதனை உறுதி செய்யும் வகையில் அண்ணாமலை நியமனம் பார்க்கப்படுகிறது. பூத், வார்டு வாரியாக மக்கள் சந்திப்பை நடத்தும் அவர், சமுதாய தலைவர்களுடன் தனிப்பட்ட முறையில் ஆலோசிக்கவுள்ளார்.
News January 29, 2026
இது எனது மரணத்திற்கு பிறகு வெளியாகும்: ஜாக்கி சான்

71 வயதான ஜாக்கி சான், தனது ரசிகர்களுடன் உணர்ச்சிபூர்வமான செய்தியை பகிர்ந்துள்ளார். பெய்ஜிங்கில் தனது புதிய திரைப்படத்தின் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், ஒரு சிறப்பு பாடலை பதிவு செய்துள்ளதாகவும், அது தனது மரணத்திற்கு பின்பே வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார். இப்பாடலின் மூலம் தனது ரசிகர்களிடம் இருந்து பிரியாவிடை பெற அவர் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


