News January 8, 2026
தவெகவின் தேர்தல் ஆஃபர்: திருமாவளவன்

தேர்தலுக்காக தவெக எல்லா கதவுகளையும் திறந்தே வைத்திருப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆட்சியில் பங்கு தருவதாக தவெக ஆஃபர் அளிப்பதாக கூறிய அவர், தீபாவளி, பொங்கலுக்கு ஆஃபர் கொடுப்பதுபோல, தேர்தலுக்கு ஆஃபர் கொடுக்கும் கட்சியாக தவெக உள்ளது என விமர்சித்துள்ளார். தனித்தே ஆட்சியை பிடிக்க முடியும் என நம்பும் அவர், தேர்தலுக்கு ஆஃபர் போட்டு காத்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News January 31, 2026
ஓபிஎஸ் தனித்து போட்டியிட விரும்பும் திமுக

முன்னாள் CM OPS, தனித்து நிற்பதே தங்களுக்கு சாதகம் என ரகசிய ஆய்வுக்கு பின் திமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அவர், திமுகவுடன் கூட்டணி வைத்து களமிறங்கினால், அவரது ஆதரவு ஓட்டுகள் திமுகவிற்கு கிடைக்காது என்றும், அதே நேரத்தில் OPS தனித்து நின்றால் அதிமுக ஓட்டுகள் பிரிவதுடன் திமுகவின் வெற்றிக்கும் வழிவகுக்கும் எனவும் பேசப்பட்டுள்ளதாம்.
News January 31, 2026
தீவிர சிகிச்சை பிரிவில் H.ராஜா.. என்னாச்சு?

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் H.ராஜா அப்பல்லோ ஹாஸ்பிடலில் ICU-வில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனியார் டிவி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, அவர் திடீரென மயங்கி விழுந்தார். மூளை பக்கவாதம் என கருதி முதலில் அருகிலுள்ள ஹாஸ்பிடலுக்கும், பின்னர் அங்கிருந்து அப்பல்லோவுக்கும் அழைத்து செல்லப்பட்டார். தற்போது ICU-வில் அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலை தேறி வருவதாக தகவல் வந்துள்ளது.
News January 31, 2026
தங்கம் விலை தலைகீழாக குறைகிறது!

சர்வதேச சந்தையில் தங்கம் விலை 9 சதவீதம் அதிரடியாக குறைந்துள்ளது. நேற்று ஒரு அவுன்ஸ் (28.35g) தங்கத்தின் விலை $5,595.46-ஆக உச்சத்தை எட்டியது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் $434.45 குறைந்து $4,895-க்கு விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளியும் $29.16 ஆக சரிவை எட்டியுள்ளது. இதன் காரணமாக இன்று இந்திய சந்தையிலும் தங்கம், வெள்ளி விலை குறைய வாய்ப்புள்ளது.


