News February 6, 2026
தவெகவின் இணையதளம் முடங்கியது!

தேர்தல் அறிக்கையில் மக்களின் பரிந்துரைகளை பதிவு செய்வதற்காக தவெக வெளியிட்ட இணையதளம் அடுத்த சில மணி நேரங்களிலேயே முடங்கியது. ஒரே நேரத்தில் அதிகப்படியானோர் இணையதளத்தை அணுகியதால் ஸ்தம்பித்ததாக தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் தங்கள் பரிந்துரைகளை மின்னஞ்சல் வாயிலாகவும் தெரிவிக்கும் வகையில் tvkmanifesto2026@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை வெளியிட்டுள்ளது.
Similar News
News February 6, 2026
சம்பாதிச்சா வரி கட்டித்தான் ஆகணும்: தமிழிசை

‘புலி’ பட வரி ஏய்ப்பு விவகாரத்தில் விஜய்க்கு விதிக்கப்பட்ட ₹1.5 கோடி அபராதத்தை சென்னை HC உறுதி செய்துள்ளது. இது விஜய்யின் முறைகேட்டை காட்டுகிறது என விமர்சனங்கள் எழுகின்றன. இந்நிலையில், இதுகுறித்து பேசிய தமிழிசை செளந்தரராஜன், சம்பாதித்தால் வரி செலுத்திதான் ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அரசியலுக்கு வந்தால் எல்லா விமர்சனங்களையும் தாங்கித் தான் ஆக வேண்டும் என்றும் அவர் கூறினார்.
News February 6, 2026
ரெப்போ வட்டி என்றால் என்ன தெரியுமா?

RBI-ன் ரெப்போ வட்டி 5.25% ஆக இருக்கும் நிலையில், வங்கிகள் கொடுக்கும் கடனுக்கு வட்டி ஏன் அதிகமாக உள்ளது தெரியுமா? வங்கிகள், குறுகிய கால நிதி தேவைக்காக RBI-யிடம் வாங்கும் கடனுக்கு விதிக்கப்படுவதே ரெப்போ வட்டி(5.25%). ஆனால், வங்கிகள் வழங்கும் கடன்களில், ரெப்போ வட்டியுடன் செயல்பாட்டு செலவுகள், ஆபத்து, லாப விகிதம் போன்றவற்றையும் கூட்டுகின்றன. இதனால், லோன்களுக்கு கூடுதலாக நாம் வட்டி கட்டுகிறோம்.
News February 6, 2026
வீட்டில் அழுக்கான இடம் இதுவா…. ஷாக் மேட்டர்!

நம் வீட்டில் நோய்கள் உண்டாக்கும் கிருமிகள் நிறைந்துள்ள இடம் சமையலறை தானாம். ஆம், பாத்திரம் துலக்க பயன்படுத்தும் ஸ்பான்ஜில் தான் அதிக எண்ணிக்கையில் கிருமிகள் உள்ளன. இதற்கு அடுத்து கிச்சன் சிங்க், டூத் பிரஷ் மற்றும் அதன் ஸ்டாண்ட், ரிமோட் கன்ட்ரோல், கீபோர்ட், காஃபி மேக்கர், பாத்ரூம் ஷெல்ப், டவல்கள், மிதியடிகள் மற்றும் கதவுகளின் கைப்பிடிகளில் கிருமிகள் நிறைந்துள்ளன. சுத்தம் பராமரியுங்கள்!


