News January 6, 2026
தவெகவால் எந்த தாக்கமும் இல்லை: சசிகாந்த் செந்தில்

தவெகவால் தேர்தலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என MP சசிகாந்த் செந்தில் கூறியுள்ளார். குறைந்த சதவீத வாக்குகளையே அவர்களால் பெற முடியும் என்ற அவர், தங்களது கொள்கை, செயல்பாடுகளில் ஒரு தெளிவற்ற அரசியலை அவர்கள் செய்து வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், அவர்கள் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் அது இண்டியா கூட்டணியின் வெற்றிக்கு உதவும் தாக்கமாகத்தான் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 3, 2026
அப்பா இறந்துவிட்டார்.. கார் ஓட்டுநரின் பலே மோசடி

பிறரின் அனுதாபத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கில் கொள்ளையடித்த சென்னை கார் டிரைவர் வசமாக சிக்கினார். கார் பயணத்தின் போது அந்நபரின் போனில், உன் அப்பா இறந்துவிட்டார்; பணம் தேவைப்படுகிறது என வாய்ஸ் ஒலித்துள்ளது. செய்வதறியாமல் அவர் நடிப்பதை நம்பி ஒவ்வொரு பயணியும் ₹10000, ₹20000 தந்து உதவியுள்ளனர். இவரது நாடகத்தை கண்டுபிடித்த வக்கில் ஒருவர் போலீசில் புகாரளித்திட, குற்றத்தை கார் ஓட்டுநர் ஒப்புக்கொண்டார்.
News February 3, 2026
இன்றைய நல்ல நேரம்

▶பிப்ரவரி 3, தை 20 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: துவிதியை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்
News February 3, 2026
வங்கியில் 418 பணியிடங்கள்.. ₹48,480 சம்பளம்

பேங்க் ஆஃப் பரோடாவில் ஐடி பிரிவில் காலியாக உள்ள 418 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளுக்கு B.E, B.Tech, M.Tech, M.E, MCA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். சம்பளமாக ₹48,480 முதல் ₹1,05,280 வரை வழங்கப்படும். விருப்பமுள்ள நபர்கள் பிப்.19-க்குள் இந்த <


