News November 23, 2025
தவாகவில் இருந்து பாமகவுக்கு தாவிய முக்கிய நிர்வாகி!

தவாக மாநில இளைஞர் சங்க செயலாளர் ஆறுமுகம், அன்புமணி முன்னிலையில் பாமகவில் இணைந்தார். கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தவாகவை வளர்க்க வேல்முருகனுடன் தீவிரமாக களப்பணியாற்றி வந்த நிலையில், திடீர் டிவிஸ்டாக பாமகவுக்கு தாவியுள்ளார். மேலும், அவரது ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோரும் பாமகவில் இணைந்துள்ளனர். பாமகவில் தந்தை – மகன் மோதலுக்கு நடுவே கட்சியை வலுப்படுத்த அன்புமணி தீவிரம் காட்டி வருகிறார்.
Similar News
News February 10, 2026
Epstein files-ல் சிக்கிய மேலும் இரு பிரபலங்கள்

2015-ல் எப்ஸ்டீன் நடத்திய ’Wild Dinner’ பார்ட்டியில் மஸ்க் & மார்க் ஜுக்கர்பெர்க் கலந்துகொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள Mail-களில், எப்ஸ்டீன் தீவில் எப்போது பார்டி நடக்கும் என எலான் கேட்டிருப்பதும், நிகழ்ச்சி முடிந்த பிறகு, பார்ட்டி செம ஹிட் என எப்ஸ்டீன் பதிலளித்திருப்பதும் தெரியவந்திருக்கிறது. அந்த பார்ட்டியில் என்ன நடந்தது என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
News February 10, 2026
ஏப்.19-ல் தமிழகத்திற்கு தேர்தலா?… அரசின் FACTCHECK

TN-ல் ஏப்.19-ம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதாக SM-ல் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், இது தற்போதைய அறிவிப்பு இல்லை எனவும், பழைய செய்தி இப்போது வைரலாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ECI துணை ஆணையர் <<19077197>>பானு பிரகாஷ் எத்துரு <<>>நாளை (பிப்.11) தமிழகம் வருகிறார். அவரது ஆய்வுக்கு பிறகு தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
News February 10, 2026
பாகிஸ்தானின் U Turn.. ₹1500 கோடி

IND-க்கு எதிரான போட்டியை <<19097730>>PAK <<>>புறக்கணித்திருந்தால், ICC உள்ளிட்ட உலகளாவிய ஒளிபரப்பாளர்களுக்கு ₹1,500 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும். போட்டி ரத்தாகி இருந்தால் ஹாட்ஸ்டாருக்கும் ICC பெரும் இழப்பீடு வழங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும். ஹாட்ஸ்டாருக்கு, 10 வினாடி விளம்பரத்திற்கு ₹25- 40 லட்சம் வீதம் அந்த ஒரு நாளில் மட்டும் ₹200-300 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என தகவல் வெளிவந்துள்ளது.


