News January 11, 2026
தவறை ஒப்புக்கொள்கிறோம்: X

Grok AI மூலம் வெளியான அநாகரீக போட்டோ மற்றும் வீடியோக்கள் குறித்து இந்திய அரசு எச்சரிக்கை விடுத்த நிலையில், தனது தவறை ஏற்றுக்கொள்வதாக X தெரிவித்துள்ளது. இனி வரும் காலங்களில் இந்திய சட்டங்களை முழுமையாக பின்பற்றுவதாகவும் அந்த நிறுவனம் உறுதி அளித்துள்ளது. இது தொடர்பாக, 600 கணக்குகள் உட்பட 3,500 உள்ளடக்கங்கள்(Contents) நீக்கப்பட்டதாக X குறிப்பிட்டுள்ளது.
Similar News
News February 3, 2026
CBSE 10, 12-ம் வகுப்பு ஹால்டிக்கெட் வெளியானது!

CBSE 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. CBSE பொதுத் தேர்வுகள் பிப்.17-ம் தேதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளியாகியுள்ள ஹால் டிக்கெட்டை மாணவர்கள் நேரடியாக டவுன்லோடு செய்ய முடியாது. அவற்றை சரிபார்த்து, கையொப்பமிட்டு மாணவர்களுக்கு விநியோகிப்பது பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பாகும்.
News February 3, 2026
தங்கம், வெள்ளி.. விலை ₹20,000 மாறியது

<<19039267>>தங்கத்தை போல்<<>> வெள்ளி விலையும் மீண்டும் ஏறுமுகத்திற்கு மாறியுள்ளது. காலையில் வெள்ளி கிலோவுக்கு ₹20,000 குறைந்த மகிழ்ச்சி ஒருநாள் கூட நீடிக்கவில்லை. மாலையில் அதே ₹20,000 அதிகரித்துள்ளது. சென்னையில் தற்போது, வெள்ளி 1 கிராம் ₹300-க்கும், 1 கிலோ ₹3 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 5 நாள்களில் மட்டும் வெள்ளி கிலோவுக்கு ₹1.25 லட்சம் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
News February 3, 2026
பள்ளி மாணவன் பையில் கஞ்சா: அரசை சாடிய நயினார்

சென்னையில் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவன் கஞ்சா எடுத்து சென்ற சம்பவத்தை சுட்டிக்காட்டி, அரசை நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார். பள்ளி மாணவர்கள் கைகளில் கஞ்சாவும், பைகளில் பட்டாக்கத்தியும் புழங்கும் நிலையில், ‘கல்வியில் சிறந்த TN’ என்று விழா எடுத்ததற்கு திமுக வெட்கித் தலைகுனிய வேண்டும் எனவும் சாடியுள்ளார். மேலும், திமுகவை அகற்றினால் மட்டுமே TN நிம்மதிப் பெருமூச்சு விடும் என்றார்.


