News March 14, 2025
தவறி விழுந்து உயிரிழப்பு: ரூ.3 லட்சம் நிவாரணம்

சேலம், மேட்டூர் வெள்ளார் கிராமம் அரசமரத்தூர் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி (55). இவர் நேற்று தண்ணீர் தொட்டியின் மீது ஏறி பணி செய்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News March 14, 2025
சேலம் மாவட்டத்திற்கான பட்ஜெட் அறிவிப்புகள்

▶ சேலம் மாநகராட்சியில் ‘முதல்வர் படைப்பகம்’ அமைக்கப்படும்.▶சேலம் மாவட்டத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய நூலகம் அமைக்கப்படும். ▶சேலம் அன்புச் சோலை மையம். ▶சேலம் பால் நிறுவனம் நவீனமயமாக்கப்படும். ▶சேலம் தெலுங்கனூரில் தொல்லியல் அகழாய்வுகள்.
News March 14, 2025
சேலம் ஆவின் பால் நிறுவனம் நவீனமாக்கப்படும்

சேலம், ஈரோடு, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான ஆவின் பால் நிறுவனங்கள் நவீனமயமாக்கப்படும். ஆவின் பால் நிறுவனங்களில் உள்ள சாதனங்களை நவீனப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என 2025- 2026 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
News March 14, 2025
சேலத்தில் புதிய நூலகம்: பட்ஜெட்டில் அறிவிப்பு

“போட்டித் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்காக சேலம், கடலூர், நெல்லை ஆகிய மாநகராட்சிகளில் சுமார் 1 லட்சம் புத்தகங்களுடன் சிறப்பு நூலகங்கள் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் வசதிகளுடன் புதிய நூலகம் அமைக்கப்பட வேண்டுமென சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள், பேரவையில் கோரிக்கை வைத்த நிலையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.